தாத்தா பாட்டி தினம் எனது பார்வையில் ( டிசம்பர் 10 )
வலைதளத்தில் வாங்கியகைத்தடி ஊன்றியபடி உலாவும்தாத்தா
சிலைநிலத்தில் உடைந்ததுபோல முடங்கியபடி தவழும்பாட்டி...
ஊனமின்றிய உடல்வலிமை கூன்முதுகில் குடிகொண்டால்
ஓடியநாட்களில் தேடியசெல்வங்கள் ஒருமுறையேனும் உதவிக்குவருமா...?
நாடிநரம்புகள் துடிக்கமறுக்கும் இன்றையசந்ததி உணரமறுக்கும்
வாடிவதங்கிய வாழையாவாழ்க்கை தேடிப்பெற்ற வரமாவயோதிகம்...?
முதியோர்இல்லம் காணாகுடும்பம் மதிப்புயர்ந்து ஓங்கிநிற்கும்
விதியோசதியோ சேராதிருந்தால் கதிராய்பெருகி களம்நிறைக்கும்...
நரைசிகை கரியமை மறைகாண புறம்பேசும் பூவையர்கூட்டம்
திரைமறை அரியணையேறும் இரைகாணா துறம்நாடி துயரில்வாட்டும்...
விழத்தொடங்கும் பற்களெல்லாம் வார்த்தைகள்குறைந்து சொற்களும்மங்கும்
பிடித்தஉணவும் நாவும்நோகும் அச்சம்கொண்டால் அதுவும்போகும்...!
இளமைமட்டும் பிழையின்றி எவருக்கேனும் குடிகொண்டால்
மிளகைபுசித்த மழைக்காலம் அரங்கேறநிற்கும் ஆற்றுப்படுகையில்...!
கடந்தகாலத்தில் உழைத்தநேரத்தை எண்ணிடவியலாது கழித்ததருணங்களை
காலக்கடைசியில் இளைத்தகோலத்தில் தழைத்தசந்ததியோடு எப்படிப்பகிர்வது...?
பேசுவதில்லை வம்சக்கொடிகள் வீசிடும்காற்றிடத்தே விசும்பிடும்இவர்கள்
மாசுபெருக்கிய விஞ்ஞானவளர்ச்சி
காசிசென்றேனும் கங்கையில்கரையட்டும்...!
பருவமழை தெருமுனையில் பால்யநண்பன் முகநூலில்
மருவியதிரை காட்சிப்பெட்டியில் மடிக்கணிணி மழலையர்மடியில்...