காதல் கொண்டேனே காதல் மேல்
![](https://eluthu.com/images/loading.gif)
மொழிகள் இல்லா பாசை ஒன்று விழிகள்
விழிகள் பேசிக் கொள்ளும் காதல் ,,,,
அவள் வருகை கண்டாலே
இதழ் ஒர புன்னகை பூத்திடும் காதல் ,,,,,,
அவள் ஒரு வார்த்தை பேசிட்டால்
அதை ரசிக்க தோன்றும் காதல் ,,,,,,
அவள் ஒரு பார்வை வீசிட்டால்
கால்கள் தரையில் நிற்காத காதல் ,,,,,
அவள் மேல் கொண்டேனே ,,,,,!
என் செல் போனிற்கும்
கூட காதல் அவள் நம்பர் மீது ,,,,,
கட்டிக்க டி என்னை என்று என் கடிகாரத்திற்கும்
கூட காதல் அவள் மீது ,,,,
எடுத்து மாட்டிக்க டி என்னை என்று என் மோதிரத்திற்கும்
கூட காதல் அவள் மீது ,,,,
அவளுக்கு தெரியுமோ தெரியாதோ அவள் வளையல்கள்
என்னை வம்புக்கு இழுப்பதை ,,,,
அவளுக்கு தெரியுமோ தெரியாதோ அவள் தோடு
என்னை புரட்டி எடுப்பதை ,,,,
என் காதலி அழகி அவள் ,,,,
அவ மஞ்ச தாவணி போட்டு வந்தா
மனசு பூரா மயக்கம் தானே ,,,,,
அவ லேசா சிரிச்சாலே நெஞ்சு பூரா
செழிப்பு தானே ,,,,,
அவ மாலையில் வெளிய வந்தா சூரியனு ஒளியும் தானே .....!