இன்றும் நாளையும்

இன்றும் நாளையும்

'அஸ்வின் அஸ்வின்.... டேபிளில் டிபன் வச்சுட்டேன் எடுத்துக்கோ'
கலா சொல்லிட்டே மீண்டும் நெட் ல் பேப்பர் படிக்கத் தொடங்கினாள் ....பூஜை முடித்து வெளியே வந்த கல்யாணிக்கு இந்த காட்சியை பார்த்ததும் கோபம் கொப்பளித்தது ...
என்ன பெண் இவள்.. பெற்ற பிள்ளைக்கு அருகில் இருந்து சாப்பாடு போடுறத விட என்ன வேலை.. கல்யாணி முகத்தை பார்த்ததும் புரிந்து கொண்ட கலா, 'அம்மா இது இங்க பழக்கமான விஷயம்.... அவனே ஜாம் தடவி சாப்பிட்டு போயிடுவான் மா ' உன்னை போல என்னால கிச்சன்லயே என் லைப் வேஸ்ட் பண்ண முடியாதுமா'.....சமைக்கல வெறும் பிரட் அதுல கூட ஜாம் தடவ கஷ்டமானு கல்யாணிக்கு ரொம்ப கோவம் வந்தது மகள் மேல . காலத்துக்கு தக்க மாறிக்கோமா என்ற அட்வைஸ் வேற ......
கல்யாணி கலங்கிய மனசுடன் மகள் அருகிலே சென்று அவள் தலையை வருடியபடியே, “கலா நான் சொல்றதை கொஞ்சம் கேளு “முன் ஏரு செல்லும் வழி பின் ஏரு செல்லும் “ சொல்லுவாங்க, பிள்ளைகளுக்கு நாம தான் முன்னுதாரனமா இருக்கணும் காலம் மாறலாம் கடமை தவறக்கூடாது.வசதிகள் வாய்ப்புகள் பெருகலாம் சொந்தம் ,அன்பு, பாசம் சுருங்கக் கூடாது.இன்னிக்கு கம்ப்யூட்டர் வொர்க் முக்கியமா தெரியும்.. மகனுக்கு சாப்பாடு போடுறதுக்கு சோம்பல் பட்டால் நஷ்டம் உனக்கு தான்.உன்னிடம் உன் பையனுக்கு ஓடுதல் பாசம் இல்லாம போய்டும் பின்னாளில் வருத்தப்படுவாய்”.
அம்மா ப்ளீஸ் போர் அடிக்காத போக போக உனக்கே பழகிடும், அந்தக்காலம் போல ஊட்டிட்டு ,கொஞ்சிட்டு இருக்க முடியாது அவங்க அவங்க வேலைய அவங்க அவங்க பார்த்துட்டு போய்ட்டே இருக்கணும் புரிஞ்சுக்கோ...மகள் பேசியதை கேட்டு இது பட்டு தான் திருந்தணும்கடவுள் விட்ட வழி என்று கல்யாணி புலம்பிட்டே போனாள்.
“இன்றும் நாளையும் “ தொலைகாட்சி நிகழ்ச்சி பார்த்த வர்ஷினி இன்று முடிந்தது நாளை என்ன போடுவானோ என்று யோசித்து கொண்டே தன் வேலைகளை தொடர்ந்தாள்.
அதே வீடு வயதான கோலத்தில் கலா, மாடர்ன் இளைஞனாக
அஸ்வின் , வாட்சப் பார்த்துகொண்டு இருந்தவன் அம்மாவின் அழைப்பையோ அம்மாவின் இருமலையோ கவனிக்கவே இல்லை. அஸ்வின் அஸ்வின் கலா குரல் அவனை எரிச்சல் படுத்தியது...அம்மா அலமாரியில் மருந்து இருக்கு ,எடுத்து குடிச்சுக்கோ. அஸ்வின் ரொம்ப முடியலமா கொஞ்சம் ஹாஸ்பிடல் வரை வாம்மா கலா கெஞ்சினாள் ...அம்மா நீ தான் அவங்க அவங்க வேலைய அவங்க அவங்க தான் பார்த்துக்கணும் சொல்லுவ...டோன்ட் டிஸ்டர்ப் மீ ப்ளஸ் வேணும்னா கால் டாக்ஸி பிடித்து ஹாஸ்பிடல் போய்ட்டுவா காலத்துக்கு தக்க மாறிக்கோமா.......நான் என் கேர்ள்பிரெண்ட் கூட பேசிட்டு இருக்கேன், சரியாய் பேசலைனா அவ கோவிச்சுட்டு போய்டுவா அம்மா ..புரிஞ்சுக்கோமா......கேர்ள்பிரண்ட் கோவிப்பா கவலை கூட அம்மா பத்தி இல்ல...அஸ்வின் மனசுல தாய்பாசம் ,அன்பு, மனிதாபிமானம்கொஞ்சம் கூட இல்லை , இதையெல்லாம்யோசிச்ச கலா மனசிற்குள் அம்மாவின் வார்த்தைகள் ஒலித்தன “, பிள்ளைகளுக்கு நாம தான் முன்னுதாரனமா இருக்கணும் காலம் மாறலாம் கடமை தவறக்கூடாது.வசதிகள் வாய்ப்புகள் பெருகலாம் அன்பு பாசம், மரியாதை சுருங்க கூடாது” தன் தவறை தாமதமாகஉணர்ந்த கலா செய்வது அறியாது திகைத்தாள் ......
தொலைகாட்சி நிகழ்ச்சி பார்த்த வர்ஷினி கலாவிற்காக வருந்திய அதே நேரம் பாடம்கற்ற உணர்வுடன் தனதுகுழந்தைகள் வருவதற்குள் அவர்களுக்கு பிடித்த உணவு சமைத்து கசங்கிய ஆடை மாற்றி பளிச்சென்று அவர்களை வரவேற்க வாசல் சென்றாள்..... அம்மாவை பார்த்த குழந்தைகள் ஓடி வந்து கட்டிகொண்டனர்..அம்மா இன்னிக்கு ரொம்ப அழகா இருக்கீங்க என்று கொஞ்சினர்.....போய் கை கால் கழுவிட்டு சாப்பிட வாங்க ... சொன்ன வர்ஷினி .....எந்த தாயும் பிள்ளைகள் வருங்காலத்தில் தங்களை கவனிக்கணும் என்பதற்காக அன்பு செலுத்துவதில்லை.ஆனாலும் அன்பு மரியாதை மனிதாபிமானம் எல்லாம் கற்றுக்கொடுப்பது தாயின் கடமை....வாழ்ந்து காட்டி அவர்கள் கற்று கொள்ள செய்வதே தாய்க்கு அழகு....ஒவ்வொரு தாயும் தன் குழந்தைகள் நல்ல குணத்துடனும் நல்ல பழக்க வழக்கங்களுடனும், நல்ல எண்ணங்களுடனும் வாழ்ந்தால் அவங்களுக்கு எல்லா நல்லதும் கிடைக்கும் என்று எதிர்ப்பார்கள்.பலவாறு யோசித்த வர்ஷினி நல்ல முயற்சி செய்த “ இன்றும் நாளையும் “ நிகழ்ச்சி தயாரிப்பாளருக்கு மனதார நன்றி கூறினாள்.

எழுதியவர் : ஸ்ரீமதி (8-Dec-17, 5:50 pm)
சேர்த்தது : srimathy
Tanglish : intrum naalayum
பார்வை : 166

மேலே