பிச்சைக்காரி

கந்தல் உடையில்,
காவிய நாயகி...!

கூந்தல் சடையில்,
குடியேறிய அழுக்கு...!

வறுமையின் பிடியில்,
வளம் இழந்த மேனி...!

வெம்மையின் கொடுமையில்,
வெடிப்புற்ற பாதங்கள்...!

பசியின் கோரத்தில்,
திருவோடான கைகள்...!

விடியலின் தேடலில்,
பாவையவள் கண்கள்...!

இரவின் விடியலுக்கு அல்ல – அவள்
வாழ்வின் விடியலுக்கு...!!!

- Written by JERRY

எழுதியவர் : ஜெர்ரி (12-Dec-17, 12:12 am)
பார்வை : 717

மேலே