தன்னலமற்ற தாயன்பு

என் முதல் காதலி என் தாய்
கடவுளின் கருணை வடிவம்
கார்மேகமென அன்பு
கிள்ளை மொழியை அறிமுகம் செய்பவள்
கீச்சென்று கத்தாமல் வளர்ப்பவள்
குழந்தை இன்பம் நம்மால் பெறுபவள்
கூறும் மொழியில் மகிழ்பவள்
கெட்ட வழியில் செல்லாமல் காப்பவள்
கேடில் விழுச்செல்வமென நினைப்பவள்
கைகொடுக்க தயங்காதவள்
கொடுக்க மட்டும் தெரிந்தவள்
கோமேதகம் அவளை வணங்குகிறேன் !!!