அன்பான அம்மாவுக்கு

அன்பினை அள்ளித்தரும் ,
அழகிய தேவதை அவள்!!!
ஆலயத்தின் ,
ஆனந்தக்கீதம் அவள்!!!
இறையை மிஞ்சிய இறையும் அவள்!!!
ஈன்றவர்க்கு உதவுபவள்!!!
உயிர்க்கொடுத்து,
உயிர்க்காக்கும் தோழி அவள்!!!
ஊக்கம் கொடுக்கும் தோழன் அவள்!!!
எட்டாத நல்லெண்ணம் உடையவள்!!!
ஏழையின் சிரிப்பு அவள்!!!
ஐயங்களைப் போக்குபவள்!!!
ஒப்பிட முடியாத ,
கலையவள்!!!தன் பிள்ளைக்காக
ஓடாக தேய்பவள்!!!
ஔவையின் அழகிய தமிழ் அவள்!!!

என்
கண்ணும் அவள்;
கண்ணம்மாவும் அவள்!!! என்னுயிர்
காதலியும் அவள்!!!என்
கிழக்குத் திசை அவள்!!!
கீதம் என்னும் சங்கீதம் அவள்!!!
குயிலின் ஓசை அவள்!!!
கூர்மையான அறிவுடையவள்!!!
கெட்டதை தடுப்பவள்!!!
கேள்வியும் அவள்;பதிலும் அவள்!!!
கைக்கொடுக்கும்
கடவுள் அவள்!!!அன்பினைக்
கொட்டும் அருவியவள்!!! என் மனக்
கோவிலும் அவள்!!!

சத்தியத்தின் குரு அவள்!!!
சாதனை சின்னம் அவள்!!!நம்பிக்கைச்
சிறகு அவள்!!!
சீதையின் குணம் அவள்!!!
சுற்றம் விரும்பும் உறவு அவள்
சூப்பர்ஹிட் ஹீரோவும் அவள்!!!நம்மைச்
செதுக்கும் உளி அவள்!!!என் முதல்
சேயும் அவள்!!!
சொர்க்கப்பூமியும் அவள்!!!
சோகத்தை விரட்டுபவள்!!!

பிள்ளைகளின்
தவற்றைப் பொறுப்பவள்!!!வலியைத்
தாங்கி நம்மையும் தாங்குபவள்!!!
தித்திக்கும் சொல் அவள்!!!வினைத்
தீர்க்கும் உருவே அவள்!!!
துக்கத்தை எதிர்ப்பவள்!!!
தூங்காது நம்மைக் காத்தவள்!!!
தெகட்டாத தேன் அவள்!!!
தேடும் கவிதை அவள்!!!நமக்குத்
தொண்டுச் செய்வதை
வரமாக நினைப்பவள்!!!
தோல்வியின் வெற்றி அவள்!!!!

நன்றி மறவா இறையவள்!!!
நானும்,நீயும் சொல்லும் ,
அன்பு வார்த்தை (அம்மா) அவள்!!!
நினைத்தாலே இனிக்கும்
முக்கனி அவள்!!!
நீ தான் என்னுயிர் என்பாள் அவள்!!!
நுட்பம் அறிந்தவள்!!!தமிழ்
நூல்களும் அவள்!!!
நெஞ்சம் மறக்காத நினைவு அவள்!!!
நேசிக்க மட்டுமே தெரிந்தவள்!!!தான்
நொந்தாலும்,தன் பிள்ளை மனம்
நோகாமல் பார்த்துக்கொள்பவள்!!!

பண்பின் முழுஉருவம் அவள்!!
பாசக்கடல் அவள்!!!
பிணித்தீர்க்கும் மருந்து அவள்!!!
பீடையை ஒழிப்பவள்!!!
புன்னகை அழகி அவள்!!! மல்லிகைப்
பூவின் மணம் அவள்!!! எட்டாத
பெருமை அவள்!!!என் தமிழ்ப்
பேச்சும்; மூச்சும் அவள்!!!
பைந்தமிழின் அழகு அவள்!!!
பொறுமையின் சிகரம் அவள்!!!நான்
போற்றும் உலகம் அவள்!!!

நம்,
மனதை நன்கு அறிந்தவள்!!!என்றும்
மாறாத; மறவாத அன்புடையவள்!!!
மின்னும் நட்சத்திரம் அவள்!!!நம்
மீது அன்பினை மட்டும் எதிர்ப்பார்ப்பவள்!!!!
முத்தமிழும் அவள்!!!
மூன்று எழுத்து கவிதை அவள்!!!
மெல்லிய காற்று அவள்!!!
மேகம் போன்ற
பரந்த நல்லெண்ணம் உடையவள்!!!
மொட்டு மலரும் அழகு அவள்!!!ரசிக்கும்
மௌனமொழி அவள்!!!

யாவரும் சமம் என நினைப்பவள்!!!
ராகத்தின் தலைவி அவள்!!!
ரோஜாவும் பொறாமைக்
கொள்ளும் அழகு அவள்!!!
வனத்தின் வாசம் அவள்!!!என்
வாழ்க்கையும் அவள்!!!
விவேகத்தின் வேகம் அவள்!!!!
வீரதமிழச்சி அவள்!!!
வெறுமையின் வெளிச்சம் அவள்!!!
வேற்றவரும் விரும்பும் ,
நல்மனம் உடையவள்!!!

அவளே.....
அம்மா!!!

தவம் செய்யாது,
கிடைத்த வரம் அவள்...

பாசம் வைப்போம்,
வேசம் இல்லாமல்...

நேசிப்போம்,அவள்
உள்ளத்தின் உணர்வை....

மறக்காதீர்,அன்னையை!!
மன்னிக்கும் குணமுடையவளை...

இது கற்பனை கவிதை அல்ல...
உணர்வின் கவிதை..
ஒரு மகளின் கவிதை!!!!!


I LOVE YOU AMMA....


இவ்வுலகில் உள்ள அனைத்து அம்மாவிற்கும்,
இக்கவிதை சமர்ப்ப்பணம்....

எழுதியவர் : பானுமதி (9-Dec-17, 2:37 pm)
சேர்த்தது : மதி
Tanglish : anpana ammavuku
பார்வை : 1022

மேலே