சொல்லகராதி

நிகண்டு தேடி தெரு மத்தி அலைகிறேன்,
கூற்றில் புறநடுவுட் செவி நுழைந்த வார்த்தைகள் ,
விசும்பில் தவறி வந்ததா ?
திகிரி தூக்கி வந்ததா ?
உச்சி மீதேறி மண்ணுள் அழுத்த வந்ததா?

சொல்லதிகாரி ஏதும் காண்பின்
கொங்கணர்மக்கள் என் ஈரக்கொலை பார்த்தெறிவீர்
வெள்ளேந்திய வேங்கைப்புறா
பவள இதழால் மொழிந்த வார்த்தைகளால்

சித்தம் சொரிந்து, சந்தம் களைந்து
என் ஐம்புலனும் என்னை அழிக்கும் முன்பு
கொங்குபுள்களிடம் அகராதி கொடுத்தனுப்புங்கள் .........

எழுதியவர் : கார்த்திக் (13-Dec-17, 9:42 am)
பார்வை : 79

மேலே