கனவு
கனவின் காட்டிற்குள்
கற்பக விருட்சங்கள்
வீரனின் விளையாட்டிற்கு
வினைகளே பரிசுகள்,
பெரிய மரங்களில்
தஞ்சம்புகும்
சிறு சிறு
வழிப்போக்கர்கள்,
வழி தவறும் நேரங்களில்
வழிகாட்டும்,வழிகாட்டிகளை
முதியோர் விடுதிக்கு
அனுப்பி வைக்கும்
வழிப்போக்கர்கள்,
பின் வருபவர்களுக்கும்,
வழிகாட்டிகள்,
உணவு தயாரிக்க
தொல்லைக்காட்சியை
பார்க்கும்
பாமரர்கள்,
அக்கம்பக்கத்தில் இருப்பவர்களும்
தெரிகிறார்கள் தொலைவாக,
தூர இருப்பவர்களும்
தெரிகிறார்கள்
அருகாமையாக,
விஞ்ஞானத்தால்,
விட்டில்பூச்சிகளாய்
கணினி
விளையாட்டுக்குள்,
வெட்டி வீரர்கள்,