குருநாதன் காணிக்கை
கற்பனைக்கெட்டாத காவியத்தில்
நிஜமாய் நீ இருக்க
நிழல் இல்லா நெருப்பினில்
நீதியாய் நீ இருக்க
சமரசம் இல்லா சண்டைதனில்
சாந்தியாய் நீ இருக்க
தடைகள் இல்லா தாத்பரியத்தில்
தர்மமாய் நீ இருக்க
தவறுகள் நேராது உன்
அருள் என்றும்
என்னுடன் இருக்கயிலே.