உன்னோடான என் முதல் பயணம்

கல்லூரி நேரங்களில் உனக்காக காத்திருந்த நொடிகளை அசைபோடுகிறேன். கல்லூரி முடித்த காலங்களிலும் வகுப்புகள் மாறிப்போனாலும் உன்னை பார்த்திட நேரம் காலம் எல்லாம் வசமாகித்தான் போனது . வழிகளில் வழுக்கி, திருப்பங்களில் மோதி , என்றெல்லாம் நடந்திட ஆசை கொண்டு, ஒன்றும் நடந்திடவில்லை அருகில் உன் பார்வை கண்டு . அவன் விழி பட்டதும் இதழ் பூக்கிறேன் என் ஹார்மோன் மாற்றம் அதை மறைத்திட ......

சொல்லிவிடு சொல்லிவிடு என்று கூறும் மனதுக்கு தெரியவில்லை சொல்லிவிடும் தைரியம் இதழுக்கு இல்லை என்று ..தினம் தெளிவாகத்தான் சொல்கிறேன் விழிகளில் ஏனோ புரியாமல் திரும்பிடுவான் வெறும் சிரிப்போடு மட்டும் நாட்கள் நகர்ந்தது இல்லை இல்லை பறந்தது தினம் இந்த நிகழ்வொடுமட்டும்.... இறுதிநாள் அருகில் வந்தும் இதழில் தைரியம் மட்டும் இன்னும் வரவில்லை . சென்றுவிட எத்தனிக்கும் கால்களும் கொஞ்சம் நடந்துசெல்ல மறுக்குது வந்து நீயும் சேர்த்துவிடத்தான்

oi என்ற ஒருவார்த்தை கேட்டுவிட்டு ஒருவாறு சிலிர்த்துவிட்டேன் என் முதல் காதல் கதை இன்றோடு ஆரம்பம் என்று மனதோடு நினைத்துக்கொண்டேன் முன் சென்றகால்களும் பின்னோக்கித்தான் வேகமாய் முன்னேறுது. படபடப்பு, இதழ் சிரிப்பு , குதூகலிப்பு எல்லாமும்தான் நடந்தேறுது .. ஒருவழியாய் அவன் என்னை நோக்கி வரும்பொழுது ...

தலை ஒட்டிய அரை மயிரில் அவ்வளவு ஆட்டம் , எல்லா சத்தமும் சுத்தமாய் மறந்ததுபோனவளாய் ஆனேன் கொஞ்சம் அவன் பூட்ஸின் ஒலிகேட்டு , அவன் ஒட்டித்தான் வருகையில் முன் வந்துசெல்லும் கை அனிச்சையும் என்னை கட்டிதான் அணைக்க என்று அரை நிமிடம் எண்ணிக்கொண்டேன் .
இனி என்ன நடக்கும் என்பதை முன்பே அறிந்தவளாய் இருவிழியையும் இருக்கையையும் இறுக்கமாக மூடிக்கொண்டேன் , ஓடிவந்த ஓசையும் ஒருவாறு அடங்கிவிட்டதில் அத்தனை மகிழ்ச்சியில் நான் அடுத்து என்ன நிகழும் என்று . ஒரு நிமிடமாய் காத்திருந்தும் ஒன்றும் நடக்கவில்லை என்ன செய்வதென்று எனக்கும் புரியவில்லை என்னதான் என்று இருவிழி திறந்தபோது எதிரினில் இதழ் சிரிப்போடு அவன் ஓடிவந்த களைப்பு தீர ஒருவாறு அவன் வாங்கும் மூச்சு என் பெண்மையையும் கொஞ்சம் அசைத்துடன் வைத்துவிட்டது ......

------- தொடர்கதை என்பதால் அங்கு நிகழ்ந்ததை கூற காத்து இருக்கவும் மீண்டும் வரும் வெள்ளிக்கிழமை வரை ,,,

எழுதியவர் : வான்மதி கோபால் (15-Dec-17, 11:57 am)
சேர்த்தது : வான்மதி கோபால்
பார்வை : 338

மேலே