மகிழ்வுடன் வாழும் மக்கள்
============================
கைக்கூலி வாங்குகின்ற காவல் துறை.நித்தம்
பொய்யால் வழக்கைப் புரட்டிடவேச் – செய்யும்
வழக்கறிஞர், தேர்தலில் வென்றிட வாக்கு
வழங்கி அரசமைத்து விட்டதும் மாறும்
வழக்கம் படைத்தோர், வசதியாய் வாழ
பொதுசொத்தைக் கையாடும் போக்கிரிகள் இன்னும்
இதுபோன்று குற்றம் இழைபோர் திருந்த
சிறைச்சாலை எல்லாம் சிதைந்தெமது மக்கள்
முறையோடு வாழ்வர் மகிழ்ந்து.