உன் பெயரின் முதல் எழுத்து

எழுத தெரியாத குழந்தையாய்
கிறுக்கி கொண்டுருந்தேன்
நான்
என் கிறுக்கலுக்குள்
கவிதையாய் படித்துக்கிடந்தாய்
நீ

எனக்கு எழுத தெரியவில்லை என்று
என் கைபிடித்து “அ” என எழுதினால்
தாய்

பரிபூரண சந்தோசம்
என் மொழியின் முதல் எழுத்தை
எழுதியத்திற்கல்ல
உன் பெயரின் முதல் எழுத்தை
எழுதியதற்கு

எழுதியவர் : க. ராஜசேகர் (16-Dec-17, 2:11 am)
சேர்த்தது : Raja
பார்வை : 228

மேலே