சைவம் பௌத்தத்தை அழித்ததா

இந்தியாவில் ஏற்பட்ட முதல் மதம் சிவமாகும். சித்தர்களின் தலைவர் அகத்தியராவார். அகத்தியரேத் தமிழ்மொழியை உண்டாக்கினார். இதில் யாருக்கும் ஐயம் கிடையாதென்று நினைக்கிறேன்.


இக்கட்டுரை இந்தியாவில் ஏன் சமணம் போல் பௌத்தம் தழைக்கவில்லை என்பதை விளக்கும். பௌத்த மதத்தை அசோகன் வளர்த்தது உண்மை என்பதும் சமண மடங்களும் பௌத்த மடங்களும் ஒன்றிரண்டு தமிழ் நாட்டில் இருந்ததென்பதும் உண்மைதான். தமிழர்கள் பலபேர் சமணராய் மாறியதும் உண்மை. காரணம் சமணத் துறவிகள் யாரும் தங்களைக் கடவுள் என்று தம்பட்டம் அடித்துக்கொண்டு திரியவில்லை. ஆனால் புத்தன் தன்னைக் கடவுள் என்றதால் அழிந்தொழிந்தான்.
(ஆதாரம் தமிழ் மொழியை உண்டாக்கிய அகத்தியன் பாடல்கள் கீழே பார்க்கவும்).


உலகின் மிகப்பெரிய இரண்டாவது மதம் முஸ்லீம் மதமாகும் . முஸ்லீம்கள் எல்லாம் முதலில் ஏசுவைப் பின்பற்றி கர்த்தரை வணங்கினார்கள். ஏசுவைக் கடவுள் என்று அவருக்குப்பின் வந்தவர்கள் கூற அதைப்பல முஸ்லீம்கள் மறுத்தார்கள். அவர்கள் எல்லாமும் பிற்காலத்தில் முஸ்லீமானார்கள். ஏசு பிறந்த இடத்தை சுற்றியுள்ள அராபிய தேசம் முழுவதும் முஸ்லீமானார்கள். ஏசுவைக் கொன்ற இத்தாலியர்கள் பயந்து கிருத்தவரானார்கள். இதுதான் உண்மைச் சரித்திரம். அதுதான் நம்நாட்டில் புத்தனுக்கும் நடந்தது.


சமணம் பௌத்தம் இரண்டும் சைவமதத்தை யழிக்க வந்த இருக் கோடாரிகள் தானாம். முன்னதைப் பாண்டியன் அழித்தான் பௌத்தத்தை துவக்கத்திலேயே மாமுனி அகத்தியர் அழித்தார். பிற்காலத் தமிழ்நாட்டு மன்னர்கள் தாங்கள் எழுப்பியக் கோயில் தூண்களிலும், இன்னும் பல இடங்களிலும் மகாவீர் மோனநிலையில் இருப்பதை சிற்பமாக வடித்துள்ளர்கள். அதற்காக அவற்றைத் தங்கள் கோயில்கள் என்று எந்த சமணர்களும் புலம்பவில்லை. சிலத் தூண்களில் எண்ணைக் கொப்பரைகளில் மனிதனைப் போட்டு வதைப்பதை போல் சித்தரிப்பதால் அது எமன் கோயிலாகுமோ ? தமிழன் யாரை வணங்கினான் சிவனையா முருகனையா ? என்பதைவிடுத்து தூரத்து புத்தனையும் மகாவீரையும் வணங்கினார்களா என்பதை ஏன் வீணாக மல்லுக்கட்டிப் பேசித் திரிகிறார்களோ ?. புத்தன் முற்றும் துறந்த முனிவனா அவன் நல்லவனா கெட்டவனா? அவன் தமிழருக்கென்ன செய்தான் ? அவனை நாம் ஏன் வணங்கவேண்டும். சிந்திக்கத் தெரிந்தால் சிந்தியுங்கள் இல்லை என்றால் விடுங்கள். நம் கோயில்களில் இப்படி ஒருமதம் நாட்டில் பரவமுயற்சித்ததை பழையத் தமிழ் மன்னர்கள் சரித்திரம்போல் கட்டியிருக்கிறார்கள் என்று ஏற்றுக்கொள்ள முடியாவிட்டால் விடுங்கள் . நீங்களெல்லாம் சரித்திர மேதையாகாதீர்கள். மன்னர்கள் பலவிடங்களில் ஏன் குந்தவை நாச்சியார் கூடப் பல சிவன் கோவில்கள் வைஷ்ணவக் கோவில்களையும் சைவர்களுக்கும் வைணவர்களுக்கும் கட்டினார் என்று கல்வெட்டுகள் உணர்த்துகிறது. இதை விடுங்கள் வெள்ளையன் கண்டுபிடித்த திராவிடன் என்ற சொல் வெறும் ஊகமாம்.


ஊகத்தை நிஜமென்று பேரறிஞர் அண்ணா நம் தந்தைக்குச் சொல்ல பெரியார் நாமெல்லாம் திராவிடர் என்றார். பணத்தை தவிர வேறு சிந்தனை யவர்க்குக் கிடையாது. பெரியார் படிக்காதவர் என்பது மட்டும் உண்மை. அவரிடம் உள்ள படித்தவர்கள் சொல்வதை யெல்லாம் மேடைகளில் பேசுவார். திராவிடத்தை நம்பினால் இதைவிடக் கேவலம் ஒன்றுமில்லை. நம்மவர்களை யாரும் திராவிடர் என்று கூறுவது பெருந்தவறாம். படிக்கும்போதே சங்க இலக்கியங் களில் திராவிடம் என்ற சொல் இல்லையே என்ற சந்தேகம் இந்த படித்த மேதைகளுக்கேன் ஏற்படவில்லை. சரியாக படிக்காதவர்கள் இவர்களே. பலரும் இவரைப் பின்பற்றிக் கெட்டவரே.


தற்போதும் இப்படிதான் மக்களைக் குழப்பி சமணர்கோவில் புத்தர் கோவில் இருந்தது என்று பெரிய விஷயத்தை ஆதாரமில்லாமல் பேசுகிறார்கள். டாக்டர் பட்டம் வாங்க இல்லாததையும் இருப்பதையும் புரட்டிச் சேர்த்து எழுதிய மாணவர் கட்டுரைகளைப் படித்த எவரோ சொல்வதைக்கேட்டு இவர்களும் நம்பி மேடைகளில் பேசுகிறார்கள். இதுவெல்லாம் சரித்திர மாகாது. இதை நம்பி சரித்திரம் பேசலாகாது. மற்ற ஜாதி யினரைத் தூண்டுவதே இவர்களுக்கு வேலை போலும். இவர்கள் மதம் என்ன ? கொள்கை என்ன ? என்ன வேண்டும்? தமிழ்நாட்டில் இவர்கள் தவிர யாரும் வாழக்கூடா தென்று இவர்கள் நினைக்கிறார் களோ ?. உண்மைத் தமிழர்களை இவர்கள் வெறுப்பதேன் ?.அவர்களும் மனிதர் தாமே? தமிழர்களின் ஜாதி பிடிக்காது, கலாச்சாரம் பிடிக்காது, கடவுள் பிடிக்காது, ஔவை, வள்ளுவன், கம்பன், இளங்கோவடிகள், பாரதி, தமிழறிஞர்கள் யாரையும் பிடிக்காது அவர்கள் எழுதியதையும் படிக்கமாட்டார்கள். அம்பேத்கர் வழி நடக்கிறார்களாம் கேளுங்கள். எதையும் இன்னும் வெளிப்படையாக சொல்லாமல் மழுப்புகிறார்களே ஏனாம் ? தூங்கும் போதும் விழிக்கும் போதும் ஜாதி, கடவுள், சலுகை, உதவி. நஷ்ட ஈடு, இது மட்டுமே இவர்கள் அறிந்த வார்த்தைகளோ?


பௌத்தராக விரும்பினால் பௌத்தனாக உடனடியாக மாறுங்கள். உங்களை யாரும் தடுக்கவில்லை. அதை விடுத்து எவனோப் பேசியப் பேச்சை கேட்டு பொதுக் கூட்டங்களில் அதையிடித்து யிதைக்கட்டினான் என்பதெல்லாம் பொய், மிகைப்படுத்தலாம். பெரிய கல்வெட்டு ஆராய்ச்சியாளர் போலப் பேசி வருவது பொதுமக்களிடையே சச்சரவுக், குழப்பம், அதிருப்தி ஏற்படுத்தும் என்பதை இந்தக் கிளிப்பேச்சு ஆராய்ச்சியாளருக்குத் ஏன் தெரியவில்லை ?. அறிவை வளர்க்கத் தெரியா நக்கீரன் போன்ற டி.வி. கள் உடனே எவனையாவது இதைப்பற்றிப் பேட்டிக் காண்பது. இதுதான் டி.வி. காரரின் தமிழ் வளர்க்கும் தொண்டு, பணி என்றெல்லாம் நினைக்கிறார்கள். இந்தக் குழப்ப வாதிகளுக்கு டி.வி. ஏன் துணை போகிறது. டி.வி. நடத்துபவர்களை வெளிநாட்டவர்கள் யாரும் தூண்டி விடுகிறார்களோ என்ற ஐயம் எழுகிறது. டி.வி. நடத்துபவர்கள் தேசத்தையும் மக்கள் ஒற்றுமைப் பற்றியும் கவலைப் பட்டதேயில்லை, குட்டைக் குழப்பிகள். தமிழன் முஸ்லீமானான், கிறித்துவனானான், இப்போது பௌத்தனாக விரும்புகிறான். அது அவரவர் விருப்பம். நீங்கள் நம்மவராகவே இருக்கவேண்டும் என்றுதான் நாங்கள் விரும்புகிறோம். ஆனால் நீங்களோ நீங்கள் விரும்புவதை உங்களுக்குள் பேசித்தீர்க்காமல் சந்தைக்கு வந்து பொய்யான பௌத்த விஷயங்களை எங்களிடம் பரப்புகிறீர். ஏனிப்படி? பேச்சு சுதந்திரம் இதுவல்ல. புத்தகமாக வெளியிடுங்கள் விரும்புபவன் படிக்கட்டும். மக்களை நம் கழக முன்னோடிகள் குழப்பியது போதாதா ?


புத்தன், கௌதமன் எல்லாம் சித்தார்த்தனின் உண்மைப் பெயரல்ல. கழகத் தோழர்களுக்குக் கொடுத்தது போல சித்தார்த்தனுக்கும் அவரைச் சார்ந்தவர்கள் கொடுக்கப்பட்ட பட்டமாகும். ஆனால் சித்தர்கள் சித்தார்த்தனை வேதரிஷி எனவும், அகத்தியர் நாதரிஷி என்றும் அழைத்தார். அதைக் குறிக்கும் பாடல்கள் அகத்தியர் அமுத கலை ஞானம் -1200 ல் 204, 205 வது பாடல்களில் அகத்தியர் கூறுகிறார். அப்பாடல்கள் பின்வருமாறு:


வேத ரிஷி வாவெனவே அழைத்துக் கொண்டு
வேதாந்த மூலமது உபதேசித்து
போதமுள்ள பூரணமும் அவனுக்கீந்து
புகழுடைய நாதரிஷி என்று சொல்லி
நீதமுள்ள புத்தகத்தை அவனுகீந்து
நிலைத்துமிகப் பன்னிரெண்டும் காத்தாயானால்
பேதமில்லா நாதரிஷி நீயேயாமே!
பெருமையுள்ள இந்நூலைப் பதனம் பண்ணே (204)


பண்ணியதோர் இந்நூலின் பயனைக் கேளு
பார் மீதில் உரையாதே மகிழ்ந்திடாதே
தன்மையுடன் இந்நூலைப் பதனம் பண்ணி
நானென்ற ஆணவத்தை அகற்றி மைந்தா
தன்மையுடன் பூரணத்தைப் பணிந்து கொண்டு
தளராமல் சிவயோகந் (LORD SHIVAA) தானேசெய்து
சென்னிதனில் தீயைவைத்து தீபமேற்றி
தெவிட்டாத பூரணமே தினமும்நோக்கே (205)


அகத்தியர் நாதரிஷி என்ற சித்தார்த்தனிடம் சிவமும் சக்தியும் சேர்ந்த பூரணத்தை வணங்கு என்று சொல்லி எல்லாக் கலைகளையும் கற்பித்தார், சரியென்று கலைகளையும் கற்றுக் கொண்டப் பின் சித்தார்த்தன் பூரணத்தை வணங்காது தானேக் கடவுள் என்றான். அகத்தியரோ (கீழே உள்ளது)


முழித்து மிகப் பார்த்ததொரு ஞானதிருஷ்டி
முனையான சுழிமுனையில் கண்ட காட்சி
அழித்து மிகப் பார்த்ததினால் வேதமுனி செய்த
அகத்தியதால் நீலகிரி தன்னில் வந்து
பழித்தனமாய் நின்றகிரி தன்னை கண்டேன்
பரமான புலத்தியனே கேளு கேளு
கழித்தவொரு பன்னிரண்டா யிரத்தைப் பார்த்து
கருவெடுத்து வெகுநூல்கள் கட்டினானே. (216)


சித்தார்த்தன் அகத்தியர் அமுதகலை பன்னிரண்டாயிரத்தை தன் பௌத்தச் சங்கப் பலகையாக மாற்றினானாம்.


கட்டினதுமல்லாமல் ஜாலவித்தை
கருவெடுத்து ஜகதோற்குக் கட்டினான் பார். (217)
(REVEALED TO COMMON PEOPLE)


பாடினார் நவசித்தர் அனந்தங்கோடி
பக்குவமாய் நாதரிஷி சொன்னதாலே (சங்கப்பலகை)
நாடியே நாதரிஷி தன்னைகூவி
நான்கொடுத்தக் காண்டமதை வெளியில் போட்டு
போடிஎன்ன காரியத்தை செய்தாயென்று
பெருமையுடன் நூல் வாங்கி குகைக்குள் வைத்து
சாடியே அனைவற்குஞ் சாபமீந்தேன்
சமுசையங்கள் தீராமல் சபித்தேன் பாரே. (220)


பாரப்பா நவசித்தர் பதினெட்டாகி
பாருலகில் பதினெட்டு சித்தரானார்
ஆரப்பா இவர் பெருமை அறிகுவார்கள்
அறிந்து மிகத் தெரியாதவன் தேனின் யேயாகும்
நேரப்பர் பாடினதோர் பன்னிரண்டு
நிலைத்ததொரு ஆயிரத்தைக் குறுக்கி மைந்தா
சீரப்பா தப்பாமல் பன்னிரண்டு நூறு
திறமாய் பாடியதோரிந் நூல்பாரே. (221)


இந்நூல்தான் ஆயிரத்து இருநூறுக்குள்
ஏகாந்தமான கருவெல்லாம் பாடி
முன் சொன்ன பன்னிரண்டாயிரத்தை
மூர்க்கமுள்ள மத்தகமாய்ச் சேர்த்துக்கட்டி
வண்ணமுள்ள பலகையாய்ச் சேர்த்து நல்ல
வாரிதியாம் காவேரி தன்னிலேதான்
தன்மையுள்ள சங்கமென்ற பலகையாக
சமுத்திரம் போய்ச் சேரென்று சபித்திட்டேனே (222)


நாதரிஷியை சபித்தல்
---------------------
செபித்திட்ட நாதரிஷிதனை யழைத்து
சீக்கிரத்தில் சாபமிது பிடியென்றேதான்
குவித்திட்டு வெகுநாள் தான் சென்றபின்பு
சங்கமென்ற பலகையிடஞ் சேர்வாய் நீயும்
வகுத்திட்டு சாபமது ஈந்தேனப்போ
வலுமைமிக கொண்டவனும் மறைந்திட்டானே. (223)


நாத ரிஷி வரலாறு
-----------------------
மறைந்துமிக வெகுகோடி காலந்தானும்
மகத்தான நாதரிஷி அலைந்தானப்பா
நிறைந்துமிகக் கைலகிரிவ டக்குசென்று
நிலைத்துமிக பௌத்திரகுல மானாரப்பா
கரைந்துமிக வேதரிஷி என்னசொல்வோம்
கருத்தில்லா பௌத்திரர்எனப்பேர் கொண்டோம் நாம்
உரைத்த ஒருசாபமது தீர்வதற்கு
ஒகோகோ பலகையிடம் சேரவேன்றார். (214)


சேர என்று சொன்னமொழித் தப்பாமல்தான்
சிந்தைதனில் நினைத்து வாரிதியிற்சென்றான்
கூர்மமென்ற பலகைஎதிர் நோக்கிவந்த
குறிப்பறிந்து வேதரிஷி குருவைநோக்கி
மாரல்செய்த பலகைதனை எடுத்துக்கொண்டு
மனங்குவிந்து அதிலிருந்து வறுமைபூண்டு
தேர்வதற்கு எதுவகை செய்வோமென்று
திறமாக புராணமொன்று பாடினானே.


பாடினான் புராணமொரு காசிகாண்டம்
பக்குவமாய் நாலடியுங் காந்தமொன்று
நாடினான் வேதமொடு சாத்திரமு மைந்தா
நலமான பஞ்சலட்சண மும்சொன்னான்
தேடினான்கா வியங்கள் அனந்தங்கோடி
செகத்தொர்க்கு ஒப்பனையாய் வெகுசாய்
(எங்கும் புத்தமதமே இருக்கவேண்டுமென்ற நோக்கில்)
மூடினான் சர்வமதம் ஒன்றாய்ப்போக
மூர்க்கமுடன் வெகுசங்கை பாடினானே.


ஆமாப்பா வெகுசங்கை எடுத்துப்பாடி
அரனேது நம்மைவிட ஆத்தாளேது
(NO LORD SHIVAA & SAKTHI)
நாமப்பா என்ற மதம் ஆணவத்தால்
நரரைஎல்லாம் வேதமயமாகச்சொன்னார்
(ALL DIVINE)
நாமப்பா வேதகுருதா னேயாகி
சங்கையில்லா மந்திரத்தை தானுண்டாக்கி
வாமப்பால் கொண்டதொரு வெறியினாலே
வரையான அண்டவரை யாண்டான்பாரு.


ஆண்டவனும் வேறல்ல நானேதானென்று
ஆயிரத்தெட்டு அண்டமெலாம் அடக்கி மைந்தா
பூண்டவனும் வேதமயமல் லாமல்வேறே
பூதலத்தில் சிவனேது நான்தானென்று
(NO SHIVAA BUT ME)
தீண்டாத மதமொடு இருந்தான் வேதன்
தீதிலாவே தனதைஅடக் கவென்றே
காண்டவந்தா னெரித்து கபாலமேந்தி
கருணையுள்ள சுந்தரனே போவென்றேனே.


போவென்று சொன்னவுடன் சுந்தரனுஞ்சென்று
பொல்லாத பௌத்தனென்ற சாபம் தீர்த்து
ஆவென்ற அமுதமது அவனுக்கீந்து
அருளான பஞ்சகண தீட்சைவைத்து
மானென்ற மவுனரசதீட்சை வைத்து
மகத்தான பேரொளியை அவனுக்கீந்து
கோனென்ற பொதிகைகிரி தன்னில்வாழும்
கும்பமுனி பாவமத்தில் வாவென்றேனே.


வாவென்று சொன்னவுடன் வேதமுனிதானும்
மகத்தான பலகையதைக் கையிலேந்தி
ஓவென்று சாத்திரத்தை யோதிக்கொண்டு
ஒருநொடியில் போதிகைகிரி தன்னில் வந்தான்
கூவென்றே வேதகிரிமுனி தன்னைப்பார்த்து
குருவான பலகையதைத் தாவென்றேநான்
ஊனென்ற சந்திரபுஷ் கரணிதன்னில்
ஒளித்தனடா சங்கமென்ற பலகைதானே.


தானென்ற பௌத்தமதம் ஒழிந்துபோச்சு
சதாசிவமே எங்கும் நிறைந் திருக்கலாச்சு
(SATHAASIVAM)
கோனென்ற கும்பமுனிக்க ருணையாலே
கொள்கின்ற இருள்நீங்கி வெளியாய்போச்சு
தேனென்ற அமுதமது பெருகலாச்சு
சிவ சிவா அட்சரங்கள் தொனிக்கலாச்சு
(SIVA SIVAA)
நானென்ற தத்துவங்கள் அற்றுப்போச்சு
நலமான சவுக்கார குருஉண்டாச்சே.


அகத்தியர் அமுதகலைக் ஞானம் 1200 ல் பௌத்தத்தைப் பற்றி விரிவாகக் கூறுகிறார். பௌத்தன் யார்? அவர் யாரிடம் எதைக்கற்றார்கள்?. ( LEARNT FROM AGATHTHIYAR) பிறகு பௌத்தனே கடவுளான விதத்தையும் அகத்தியரே அவர்களை இமயத்திற்கப்பால் கொண்டுபோய் விட்டதையும் விரிவாகக் கூறுகிறார். இப்படி அகத்தியர் பௌத்த மதத்தை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிந்துள்ளார். தமிழ் மக்களே அறிந்துகொள்ளுங்கள்.



ராஜப் பழம் நீ (16.12.2017).

எழுதியவர் : பழனிராஜன் (16-Dec-17, 5:10 pm)
பார்வை : 407

சிறந்த கட்டுரைகள்

மேலே