அழகு

அழகு
தன் நிழலை தானே அறியாத
மரம் செடி கொடிகள்- அழகு
அதில் மஞ்சள் வெயிலில் பாடும்
கொஞ்சும் குயிலின் ஓசை - அழகு
விட்டுச் சென்ற வீதியை
தொட்டுச் சென்ற தெருக்கள் - அழகு
அதில் தனிமையில் இனிமை காணும்
கடைவீதி விளக்கின் வெளிச்சம் - அழகு
இடைவிடாமல் செல்லும்
நெடுந்தூரத்தின் வீடுகள் - அழகு
அதில் நெஞ்சைக் கிள்ளும்
கொஞ்சும் குழந்தையின் கொஞ்சல் சிரிப்பு - அழகு
கனவாய் கலைக்கப்படாத நம் உணர்வுகள் - அழகு
அதை தலையாய் மதிக்கப்படும் நம் உறவுகள் - அழகு
- சஜூ