வா வா புதுமைப் பெண்ணே வாவா

என்னோடு கலந்த காதலியே!..
என் இருதயத்தின் உயர்விலையே!..
என் புலம்பல் நீயும்
அறிவாயோ?!
இல்லை இவன் வேண்டாமென்று எறிவாயோ!?

தடைகள் கடந்துத்தான் வாயேண்டி...
விடைகள் கொடுத்துத்தான்
போயேண்டி...

அன்பாய் அன்னையாய்
எனைச் செதுக்கியவளே!..
வம்பாய் தெம்பாய்
உனக்குள் பதுக்கியவளே!..

எனை வறுமை வதக்கிய
காலம்மீதிலே
பெரும் புலமை
கற்றுத்தந்த காதல்நாவலே!..

படிக்கிறேன் இன்றும்
உன் பக்கங்களை..
சுரக்கிறேன் அதனால்
சுடும் துக்கங்களை!..

களவாடிய பொழுதுகளும்
கவிபாடிய இரவுகளும்
கண்ணிரண்டில் நிற்குதடி...
நடந்தோடிய மணல்வெளியும்
அமர்ந்தாடிய புல்வெளியும்
நீயின்றி வெட்குதடி...

சிக்கல் இல்லாத
காதல் இல்லையடி -
சிக்கல் இல்லையானால்
அது காதலே இல்லையடி..
உனைச்சேர்வது சுலபமானால்
நான் கொண்டது காதல்
அல்லடி....
கடினங்களைக் கடக்காததும் காதலே அல்லடி..

வா! வா! புதுமைப்பெண்ணே
வா! வா!

வா! வா!
பகுத்தறிவுக்கண்ணே
வா! வா!

பாட்டன் பெரியாரைப்
படித்தப் பின்னும்
புரட்சி அண்ணலை
அறிந்த பின்னும்
அச்சம் ஏனடியோ!?
மனம்தனில் கலக்கம்
ஏனடியோ!?..

சாதித் தடையை
உடைத்துத் தள்ளடி!
புது நீதி உடையை
உடுத்திக் கொள்ளடி!
ஆணவம்கொண்ட
சமூகத்திற்கு
நல் சமத்துவம் சொல்லும்
ஆவணம்
ஆவோமடி!!

வா! வா!
புதுமைப் பெண்ணே
வா! வா!...

வா! வா!
புரட்சிக் கண்ணே
வா! வா!

எழுதியவர் : கார்த்திகைசெல்வன் (16-Dec-17, 10:12 pm)
பார்வை : 77

மேலே