காந்தி

காகிதமாய் பிறந்தாலும்
காந்தியோடுதான் பிழைக்கமுடியும்
ஏக்கத்தில் ஏழ்மை
யாரும் வெறுக்கதா
ஒரே நபர்
அகிம்சை காந்தியல்ல
அரசாங்க காந்தி
காந்தியில்லாவிட்டாலும்
காந்தியிருந்தும் தொடருகிறது
இந்தியாவில் உண்ணாவிரதம்
பசியில்லை .... வயிற்றுவலி
அப்பனுக்கு பிள்ளைகள்
தப்பாமல் பிறந்திருக்கு
தாய்நாட்டில்
அரை நிர்வாணத்துடன்
குழந்தைகள்
உன் சத்தியாகிரகம்
அமைதி போர்
என்று நினைத்தேன்
அது அறிவியலின்
தொலைதூர கிரகமாகிவிட்டது
தொலை நோக்கி கருவிக்கு
கலிலியோவை தேடுகிறோம்
காந்தியையல்ல
சுடப்பட்டது நீ மட்டுமில்ல
உன் சுதந்திரமும்
உன்னை தாக்கிய ஆயுதம்
நீதிமன்றத்தில் விசாரணைக்கு
சரிய தவற என்ற
கேள்வியோடு
அடுத்தவன் சட்டையை
கிழிக்க நினச்சு
உன் கிழிஞ்ச சட்டை
தைக்க மறந்த
அந்நியனே வெளியேறு
என்றாய்
அவன் நாட்டுக்கு
வெளியேறான்
உன் பிள்ளை
இந்திய பெருங்கடலில்
சுதந்திர மீனாய்
சுற்ற சொன்னாய்
அந்நியன் மீன் பிடிக்க
கற்றுக்கொண்டான்
காந்தி தந்தையே
நீ வேண்டும் எனக்கு
வேண்டாம் வேண்டாம்
கோட்ஸேய் கூட வருவானோ
பயம்
அடிமை அழியவில்லை
அகிம்சை கொலையுண்டது
உன்னோடு ......
காந்தி தந்தை
சுதந்திரம் பெற்று தந்தார்
என்று சொல்லி சொல்லி
சிறைபிடிக்காரன் இன்று
காந்தியே
உனக்கு மாதிரியே
உன் சுதந்திரத்துக்கு
வயசாகுது
இன்ன கொஞ்ச நாளில்
ஒப்பாரிக்கு
ஒரு கவிதை
தேவைப்படும்
சுதந்திரமா
எழுத முடியாது
கண்ணீர் மட்டும் அஞ்சலிக்கு
அனை கட்டிருக்கேன்
சொல்லி அனுப்பு தந்தையே
நீ தூதுவிட புற இல்லை
நான் வந்திட புரவி இல்லை
உன் உடம்ப போல நாடு ஆச்சு
இருக்கறது என் செல் நம்பருதான்
முடிஞ்ச போன்பன்னு
முடியாட்டி Whatsup ல மெசேஜ் பன்னு
உன் போட்டோ ஒன்னு சேர்த்து அனுப்பு
ஒரு பயனுக்கு உன்னை அடையாளம்
தெரியலை
செலஃபீ எடுத்து அழகு பாக்குறான்
இயற்கையெல்லாம் அழித்துவிட்டு
உன்னையும் தொலைச்சிட்டு
இவனுக்கு சாயம் பூசி
இவனு காணாம போய்ட்டான்
கண்ணாமூச்சி ஆட்டம்தான்
உன் கனவு இந்தியாவில்
மக்கள் கண்ண கட்டி
உன்ன பார்க்க சொல்றான்
நீ காணாமல் போன இந்தியாவில்