காலம்

உறவுகளுக்கு அறிவிக்கப்படாத
விடுமுறை காலம்.....
கண்ணீருக்கு அறிவிக்கப்பட்ட
கோடை காலம்....
கனவுகள் காகிதமாய்
கிழியும் காலம்.....
காதலும் கானலாய்
காட்சி தரும் காலம்
கடவுளும் காணாமல் போகும் காலம் அது
கையில் காசு இல்லாக் கொடிய காலம்.......