தாய்

அன்னையே உம் தியாகத்திற்கு ஈடாக
இப் பிரபஞ்சத்தில் எவரும்யில்லை!
என்னை நீ கருவில் சுமந்தாய்
உன்னுடைய கர்ப்ப வேதனையை நான் அறிவேன்.

என்னை நீ கருவாய் உருக்கி
காத்துக் கொண்டாய்!
ஈர் ஐந்ரு மாதம் என்னை கருவில் சுமந்தாய்
என்னை இவ் உலகத்தை காண செய்தாய்.

உம் குருதியைப் பாலாய்க் கொடுத்தாய்
நான் செய்த சிறு சிறு குறும்புகளை-நீ
இரசித்தாய்! என் பிள்ளை என்று
அன்னையே இம் மன்னின் புகழைக் காக்க-நீ.

என்னை பிள்ளையாய் பெற்றாய்
எனக்கு பாலோடு சேர்த்து தமிழையும் பருக கொடுத்தாய்
தமிழ்மூட்டி கவிகள் அறிய செய்தாய்
நான் என் பிறவியின் பலனை -கண்டேன்.

எனக்கு இனி ஏழு பிறவிகள் தேவையில்லை
ஏழுபிறவி வாழ்வின் அனைத்து பலனையும்-நான்
இப் பிறவியிலே-முற்றிலும் கண்டு!
மகிழ்ந்தேன்!!

எழுதியவர் : சே.சுரேஷ்தழிழ் (19-Dec-17, 6:06 pm)
சேர்த்தது : சேசுரேஷ்தமிழ்
Tanglish : thaay
பார்வை : 148

மேலே