விதையாய் ஊறியவள்
விதையாய் என்னுள் ஊறியவளே - என்னோடு
வளர்ந்திடவே விதைந்து வளர்பவளே. - என்
விழியெனும் நிலத்தில் உன் பார்வைகள்
விழுந்ததடி - அதில் என் சோகமும் வீழ்ந்ததடி
எங்கிருந்தோ வந்தாய் - என்னோடு கலந்தாய் - இன்று
இங்கிருந்து வளர்கின்றாய் - என்னோடு
தங்கியிருந்து தழைத்திடவே - காதல்
தென்றலின் சுகத்துடன் விதைந்தாயோ.-கண்ணே
தரிசு நிலமாய் தவித்திருந்தேன்.- நீ
பரிசு விதையாய் புதையக் கண்டேன்.- எனக்குள் நீ
படரப் படரவே நான் விளை நிலமாய் ஆகின்றேனடி.
ஊடலாய் என்னுள் நீ வளரும்போது - என் விழியுடன்
உடலும் வலிமை பெறுகின்றதடி - வற்றாத அந்தக்
கடலும் நம்மைப் பார்த்து தவிக்குதடி - அந்தக்
கடலுக்கு அலைகள் காதலியாய் கிடைத்ததும் - நம்போன்ற
காதலர்களை அது மரணிக்க வைக்குதடி. - அதனால் தானோ நீ
இந்த நிலத்தை நாடி வந்து விதைந்தாயோ - ஏற்கிறேன்
அந்தக் கடலும் கவலைக்கொள்ளும் விதத்தில் - நான் உன்னை
அழகாய் பூக்க வைப்பேன்,.- உன்னால் நானும்
ஆனந்தமாய் வாழவும் நிலை ஈர்ப்பேன் - என்னைத்
தோண்டத் தோண்டத் பள்ளமாய் ஆனாலும் - உன்னைத்
தூண்ட விடமாட்டேன் - உன்னைத்
துவளவும் விடமாட்டேன். - விதையே
துணிந்தே நீ வளர்கவே - நீ என்னைத்
தொட்டதால் நமக்குள் பிறந்ததடி புது உறவு.- இதுவே
தழைத்து வளர கிடைத்த நல்வரவு.