காதல்

மனித இயந்திரத்தை
இயக்கும் எரிசக்தி
காதல்

இதயத்தின் பாஷைகளை
கண்களால் மொழிபெயர்ப்பதுதான்
காதல்

மௌனத்தின் எழுத்துகளே
அதிகமாய் அச்சடிக்கப்பட்ட
அதிசய புத்தகம்
காதல்

உலகத்தின் மொத்த துன்பங்களையும் கழித்தால்
கடைசியில் மிஞ்சுவதுதான்
காதல்

அணைக்க அணைக்க
அதிகமாய் எரியும்
அதிசய நெருப்பு
காதல்

இருபதோ? அறுபதோ?
இறுதிவரை குறையாத
இளமையை பெற்றது
காதல்

விடை தெரிந்தாலும்
விடையை அடைவதற்கான
வினாவை தேடுவதுதான்
காதல்

ஆணின் கண்ணியமும்
பெண்ணின் கண்ணியமும்
புலப்படும் புள்ளிதான்
காதல்


எழுதியவர் : பெ வீரா (22-Dec-17, 5:24 pm)
சேர்த்தது : பெ வீரா
Tanglish : ethu kaadhal
பார்வை : 359

மேலே