நிழல் தேடி
சுட்டெரிக்கும் சூரியன்
சுழல வைக்கும் வாழ்க்கை
கட்டவிழ்ந்து துன்பங்கள்
கதற வைக்கும் வலிகள்
விட்டுவிடத் துடித்தாலும்
விடாப் பிடியாய் கஷ்டம்
தொட்டுவிட நினைத்தாலும்
தொலை தூரமே வெற்றி
மொட்டுவிடும் முன்னே
மடிந்து போகும் ஆசைகள்
பட்டுவிடுமெனத் தெரிந்தும்
தினம் துரத்தும் விருப்பங்கள்
நிழல்தேடி நாமும்
அலைந்து திரியும் நேரம்
இருக்கின்றன பரவலாய்
வாழும் மனிதர் அனைவருக்கும்
நிழலுக்கு வேண்டும்
யாருக்கேனும் நிழலானால் என்ன?
கிடைக்காத ஒன்றை
செலவின்றி கொடுத்திட்டால் என்ன?
நிழல்கொடுக்க நினைத்து
நாமும் நிறம் மாறும்போது
நமக்கான நிழலும்
நிச்சயம் நமைத்தேடிச் சேரும்....