என் கண் தப்பு
உன்னைப் பார்த்ததும்
எழுதும் கவிதைகளில் எல்லாம்
பிழையோ பிழை
நீ எதிரே நிற்கும் போது
நான் உன்னைப் பார்ப்பேனா
இல்லை இலக்கனம் பார்ப்பேனா..
பார்...
இலக்கணத்தில் கூட
பிழை வந்துவிட்டது இக்கணம்
இன்று விட்டுவிடு
பிழைத்துப்போகட்டும்
நாளை நான் கவிதை எழுதும் போது
நீ திரும்பி நில்..
அப்பொழுதும்
என் கவிதையில் பிழை வந்தால்
அது என் தப்பல்ல..
என் கண் தப்பு....