மண்ணாகிய நான்
*இறைவனின் இடக்கையா உங்கள் ஜாதி
* இயற்கையின் இரண்டாம் முகமா உங்கள் ஜாதி
* தொப்புள் கொடியுடன் ஒட்டி பிறந்ததா இந்த ஜாதி
*தொட்டிலில் இட்டு தாலாட்டுப் பாடியவள் சொல்லிக் கொடுத்ததா இந்த ஜாதி
* எந்த பாடபுத்தகம் தந்தது இந்த ஜாதி
*இன்னார்க்கு இன்னா காற்று தான் என்று பிரித்துக்காட்டு ஏற்றுக்கொள்கிறேன் உங்கள் சாதி வெறியினை
*இன்னார்க்கு இன்னா அரிசி என்று வகுத்துக் காட்டு ஏற்றுக் கொள்கிறேன் உங்கள் சாதி வெறியை
* நீ வெட்டிய அருவாளை போய் பார் அது செத்திரிக்கும் இந்நேரம்
* வெட்டுபட்டவன் சென்னை மழைக்கு இறந்திருந்தால் பாவம் என்று சொல்லிருப்பாய்
* வெட்டுப்பட்டவன் இராணுவத்தில் எதிரிகளால் சுடப்பட்டிருந்தால் வீரன் என்று மார்த்தட்டிருப்பாய்
* உன் வீட்டுப் பெண்ணை காதலித்ததற்கு பலிக் கொடுத்து விட்டாயே! நிலநடுக்கம்,சுனாமி,பெருவெள்ள பாதிப்பில் நீ இருந்தால் ஒரு சோற்று பொட்டலம் தருமா உன் சாதி???
*கரைபடிந்து விட்டேன் இரத்தத்தால் நான்-காதலர்களாள் அல்ல
சாதிவெறியர்களால்
* நீ சிந்த வைத்த இரத்தத் துளிகள்-என்
முகத்தில் தெளித்த எச்சில் துளிகள்
*நீங்கள் யாராக இருந்தாலும் சரி
* எப்பேர்பட்டவர்களாக இருந்தாலும் சரி
* என்னிடம் வந்து சேரும் ஒரு நாள் வரும்-அன்று
நீங்கள் கைக் கட்டி படுத்திருப்பீர்கள்
* உங்களை பக்குவமாய் சிதைத்திருப்பேன் நான்
இப்படிக்கு "மண்""