சட்டம்
தமிழ் வாழ்க! தமிழ் வளர்க !
மக்களால் உருவாகியவன் நீ, அன்றே
பல சான்றோர்களின் பொன்எழுத்துக்களால் எழுதப்பட்ட பொக்கிஷம் நீ,
அன்று ஆண்ட மன்னர்கள் மற்றும் சான்றோர்களால் போற்ற பட்ட நீ,
இன்றோ காசுக்கு விளையாகி போனாய்,
மக்களுக்கு இன்று சனியனாய் நிற்கிறாய்,
மற்றவருக்கு எல்லாம் நீ கனியாய் விளங்குகிறாய்.
இப்பொழுது என்னவென்றால் உன்னை பற்றி படிக்க தனி வகுப்பு,
அதிலும் சில விதிமுறைகள் உண்டு உன்னை யார் படிக்க வேண்டுமென்று .
மக்கள் இறுதியாக உன்னை மட்டுமே நாடி வருகிறார்கள்,
ஆனால் நியோ பல ஓட்டைகளை உடையவன்.
அன்று நீ சொன்ன ஒரு வாக்கியம் என்னவேன்று தெரியுமா,
"நூறு குற்றவாளிகள் தப்பிக்கலாம் ஆனால் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்பட கூடாது".
இன்று குற்றம் செய்யும் குற்றவாளிகளே அதை ஓப்புக்கொண்டாள்
அதை நிறைவேற்ற அரை நூற்றாண்டு ஆகிறது.
அதற்குள் அவர் மற்றும் அவருடைய வாரிசுகளும் கூட தலை தூக்கி நிக்கிறது.
நியோ அதை வேடிக்கை பார்க்கும் மரமாய் நிற்கிறாய்,
என்றோ நீ அழிந்து விட்டாய்!
இப்படிக்கு,
உன்னை உயிர்ப்பிக்க முயலுபவன்!!! ..