வாழவேண்டும்

வாழவேண்டும்....

என்போல் யாருமில்லை என் வாழவேண்டும்...

என்மேல் மற்றோரின் எண்ணம் எதுவென்றாலும் வாழவேண்டும்...

என்மேல் செலுத்தப்படும் தொடர் புறக்கணிப்பை மீறி வாழவேண்டும்...

என்மேல் காரணம்தேடி கொட்டப்படும் எரிச்சலைத் தாண்டி வாழவேண்டும்...

என்மேல் குற்றம்சொல்லி என் உணர்வுகள் உதாசீனப்படுத்தப்படும்போதும் வாழவேண்டும்...

என்மேல் உள்ள நம்பிக்கையை இழக்கப்போராடும் சூழ்நிலைகள் மத்தியிலும் வாழவேண்டும்...

என்மேல் செலுத்தப்படும் உண்மையான அன்பிற்காக வாழவேண்டும்...

என்மேல் சொல்லப்படும் குறைகளைத்தாண்டி வாழவேண்டும்...

என்மேல் செலுத்தப்படும் வரையறைகளை மீறி வாழவேண்டும்...

என்மேல் உள்ள நம்பிக்கையில் என்னருகிலிருப்பவர்களுக்காக வாழவேண்டும்...

என்மேல் எத்தனை அவமதிப்பு வந்தாலும் வாழவேண்டும்...

என்மேல் தொடுக்கப்படும் அன்பின் புறக்கணிப்புகளைத்தாண்டி வாழவேண்டும்...

என்மேல் வலிய வந்து தேள்போல் கொட்டப்படும் வாய்மொழிகளைத் தவிர்த்து வாழவேண்டும்...

என்மேல் முட்டிமோதும் தீண்டத்தகாத வரையறைகளைத் தள்ளி வாழவேண்டும்...

என்மேல் முழுமையான அவநம்பிக்கையுள்ளவர்கள் மத்தியில் வாழவேண்டும்...

என்மேல் பொறாமையின் போர் தொடுக்கும் நண்பர்கள் முன்பாக வாழவேண்டும்...

என்மேல் அளவில்லா அன்பை செலுத்தும் காதலுக்காக வாழவேண்டும்...

என்மேல் கொண்ட அன்பினால் இவ்வுலகில் பிறந்து எனக்காக மரணித்து இன்றும் ஜீவிக்கிற தெய்வத்திற்காய் வாழவேண்டும்...

எழுதியவர் : ஜான் (25-Dec-17, 5:49 am)
Tanglish : vaazhavendum
பார்வை : 97

மேலே