உன் பாதம் பின் தொடர
இமை தட்டி உன்னை
புகை படம் எடுக்கும் என் விழி
உன் புகை படத்தை தேய்த்தபடி
அழியும் என் விரல் ரேகை
முக நூல் பக்கத்தில்
முதல் தாளாய் உன் இடுகை
சமூக வலை தளங்களில்
சரளமாய் உன்னை பற்றிய என் கருத்து .....
பூங்காற்றை போல ஓயாமல் என்னுள்
அலைந்து திரியும் உன் நினைவு
உன்னை சிந்தித்த படியே வாழும் வாழக்கை
சுகமாய் அமையும் உன் பதம் பின் தொடர்ந்தால்