நம் காதல்
விழிகள் கதவு திறந்தாள் காட்சியாக உள்ளே நீ
விழிகள் கதவு மூடினாள் கனவாக உள்ளே நீ
இதயம் உள்ளிருந்து நெஞ்சை தட்டுகிறது
லப் டப் லப் டப் என்று நொடிக்கு ஒரு முறை
உன்னை காண......
எனக்கும் வெளியே எடுத்து காட்ட ஆசைதான்
உன் பேரழகை கண்டவுடன் அது
தன்னிலை மறந்து நின்றுவிட்டால்
பிறகு மோதிரம் போல்
உன் விரலை நான் கோர்த்து வாழ்வது எப்படி.......
வலிகள் யாவும் மறந்து வாழ்கிறேன்
உள்ளம் உள்ளே உன் அன்பு மருத்துவம் செய்வதால்
முடிவு எடுத்துவிட்டேன் உன்னை மட்டுமே முடிய ....
முடியா வில்லையேல் மனம் சொல்லி விட்டது செத்து மடிய
தீ முத்தம் இட்டதும் மெழுகு உருகும் காதலித்து
உதட்டை காயப்படுத்தும் முட்கள் இருப்பினும்
தென்றல் முட்களுக்கு முத்தம் கொடுக்க மறுப்பதில்லை
வன்முறையான காதல்தான் இருவருக்கும் இடையில்
இருப்பினும் இருவரில் ஒருவர் உண்மையாய் நேசிப்பதால்
அங்கே பிரிவு சம்பிட்டியல் அடி பட்டு போகிறது .
தென்றலையும் மெழுகையும் போலத்தான் என் உள்ளமும்
நமக்கு இடையில் பிரிவை பிளக்க சம்மிட்டியாய்
நம் உண்மை காதல் உதவும்