நீயில்லா தனிமை
தனித்திருக்கும் ஒவ்வாமை வாழ்தலுக்கு வழிதேடிக்கொண்டிருக்கிறது
அலைஅலையாய் அத்தனை வார்த்தைகளுக்கும் அடுக்கியபடி எந்தன் புனிதம் பற்றியபடியான அன்பாய்! மெய்மறந்தேன் நிலைப்பாடுகளை வெளிப்படுத்தாமல் ...
ஏற்றுக்கொள்ளும்படி சிலவும் ஏற்றுக்கொல்லும்படி சிலவும் வழிந்தபடி ஓடிக்கொண்டிருந்த வார்த்தை இரைச்சல் அருவிகளாய்
புறங்களை விரும்பிச்சுவைக்கும் பட்சிகளும் என்னைச்சுற்றி சிறகடிக்கத்தொடங்கின தின்றுவிடவும் குடித்துவிடவும்
அவற்றில் சில உறவுகளும்
நட்புகளும் அடங்கும்
பயங்கள் பற்றியபடி தேடல்களிலும்
ஆர்ப்பரித்தேன் அழகியலில் அன்மைவிரும்பிய கொம்பு முளைத்த சாத்தான் உருவத்தில் அன்பையுதிர்ந்தவன்
ஒருவனை ஆம் அவன் வசைபாடி உயிர் கிழித்தபோதும் செவி வழி உயிர் நிரப்பி போனவன் எப்போதாவது அழைப்பான்
இன்னும் வசைகளில் அன்போடிய அக்கடலின் ஓசைகளை இதயம்குளிர கேட்கிறேன்!...
கண்மணி..............