மழலை

மணமாகி மூன்றாண்டு முடிந்தும் மகப்பேறு வாய்க்கவில்லை எனக்கு ,
மருத்துவரின் ஆலோசனை பெற்றும் மாற்றும் ஏதும் நிகழவில்லை,
மனிதபிமானமில்லா மாந்தர் சிலர் மலடியென்னும் பட்டம் கொடுத்தனர் ,
மன்றாடிய தெய்வம் யாவும் மவுனத்தை பரிசாய் தந்தன,
மாசமான தோழியை சந்திக்க சென்ற என்னை மறுத்துவிட்டார் அவளின் மாமியார் ,
மாடிவீட்டு குழந்தையை மகளாக எண்ணி மறைமுக நாடகம் நடத்தி பார்ப்பேன் ,
மறைத்திருந்த பார்த்த அவள் தாய் மகளை அடித்து அழைத்துச்செல்வாள் ,
மண்வெட்டியால் உடலை இழந்த மண்புழுபோல் துடித்தது மனம் ,
மாதவிலக்கு தேதி தள்ளிப்போக மருத்துவர் சொன்னார் மசக்கையென ,
மண்ணில் கால்கள் விழாவண்ணம் மகிழ்ச்சியில் விண்ணில் பறந்தேன் ,
மலடியன்னும் சாபம் தீர்ந்து மாதா என்னும் வரம் தந்தது மழலை .

எழுதியவர் : (26-Dec-17, 2:31 pm)
சேர்த்தது : வினோத்
Tanglish : mazhalai
பார்வை : 118

மேலே