தாய்மை
முதன் முதலாய்
ஓர்
சின்னஞ்சிறு ஜீவனின்
பிரவேசம்
என்
கருவறைக்குள் !!!
இரு நாடி துடிப்பு ......
உடலில் ஓர்
படபடப்பு .......
மனதில் இனம் புரியா
களிப்பு .....
இருவரின் சுவாசமும்
உன் ஓர் உயிருக்காக .....
இப்பொழுதெல்லாம்
என் ஆடை
என் அளவில் இல்லை...
சரியாக சொல்ல வேண்டுமானால்
என் ஆடையின் அளவில்
நான் இல்லை !!!....
உன் அம்மா எனும்
ஒற்றை மொழி
கேட்க
பத்து மாதங்களாய்
தவம் இருக்க
நேந்து கொண்டேன் !!!....
காத்திருக்கிறோம் இருவரும் ......
நின் பாதம்
புவி தொடும்
நாளுக்காக !!!.........
இப்படிக்கு
உன் அம்மா