ஓர் தாயின் குரல்

நீ உருவாக என் உடம்பில்
இடம் கொடுத்தேன்..

மரணத்துடன் போராடி வென்று
உனை ஈன்றேன்..

வலிகளை தாங்கி கொண்டு
உனை பார்த்து சிரித்தேன்..

நீ உயிர் வாழ
என் உடம்பில் ஓடும் குருதியை
உனக்கு பருக கொடுத்தேன்..

நீ விழி மூடி தூங்க
நான் விழி மூடாமல்
உனை பாதுகாத்தேன்..

என் மார்பை மெத்தையாக்கி
என் மடியை தொட்டிலாக்கினேன்..

நீ உண்டு மீதம் வைத்த
எச்சில் சோற்றை
அமிர்தம் போல் உண்டேன்..

நீ இஷ்டப்பட்டு கல்வி கற்க
நான் கஷ்டப்பட்டு கல் உடைத்தேன்..

ஆயிரம் கஷ்டங்களை
நான் கண்ட போதிலும்
உனை கண் கலங்காமல்
ராசா போல் நான் வளர்தேன்..

கடல் கடந்து நீ சென்றாய்
கரை போல் காத்திருந்தேன்..

இந்த உலகம் உன் புகழ் பாடியது
என் மனம் உனை தேடியது
உன்னை காண கண்கள் ஏங்கியது
வா என்றேன் வந்தாய்
ஒருத்தியோடு
என் மனமிரங்கி ஏற்றுக்
கொண்டேன் மருமகளாய்..

மகளாய் நான் நினைத்தேன்
அடிமை போல் அவள் நடத்தினால்..

என் சொல்லை தட்டாமல் கேட்டு
நடந்த என் மகன்
அவள் சொல் கேட்டு என் தலையில்
தட்டி காப்பகத்தில் சேர்த்தாய்..

கருவறையில் இடம் கொடுத்த
உனக்கு உன் வீட்டில் ஒர் ஓரமாய்
இருக்க ஓர்அறை கூட இல்லையா
என் அன்பு மகனே..

அன்று நீ என்னை எட்டி மிதிக்கும்
போது வலிக்கவில்லை
இன்று என்னை விட்டு எட்டி
போகிறாய் வலியால் துடிக்கிறேன்
என் ஆசை மகனே..

உனக்கு இந்த தாய் வேணமால் போகலாம் ஆனால் என்றும்
நீ எனக்கு குழந்தை தான்
எங்கு இருந்தாலும் நீ நலமோடு
வாழ இந்த தாயின் வாழ்த்துக்கள்..!

முதியோர் இல்லத்தில்
ஓர் தாயின் அழுகுரல்

❤சேக் உதுமான்❤

எழுதியவர் : சேக் உதுமான் (27-Dec-17, 7:36 pm)
Tanglish : or thaayin kural
பார்வை : 512

மேலே