அம்மா
அம்மா...
யாசிக்காத வரமல்லவா...
யோசிக்காத உறவல்லவா...
பத்துத்திங்கள் பக்குவமாய்
உன் கருவறையில்...
வாழும்நாட்கள் நாட்கள் பத்திரமாய்
உன் கண்மணியில்...
பொத்திப்பொத்தி வளர்த்தாய்
பித்தாய் என்னை காத்தாய்...
பசி மறந்தாய்...
தூக்கம் தொலைத்தாய்...
நடை பழக்கினாய் -
தடுமாற விடமாட்டேன்...
பேசப்பழக்கினாய் -
பிறர் ஏச விடமாட்டேன்...
எனக்கென வாழ்ந்துவிட்டாய்
உனக்கென வாழ்ந்திடுவேன்
அன்பு மகளாய்...
அம்மாவின் அம்மாவாய்...