அப்படிச் சொல்லுடா என் காதல் கண்ணா
நம் இருவர் பெயர்களையும்
நம்ம ஊர் மலையில் செதுக்கி வைத்தேன் !
மலையையே காணவில்லை !
கனவு இல்லம் கட்ட
காவு கொடுத்து விட்டார்கள் !
இமயத்திற்கு சென்று
செதுக்கி வைக்கலாம் வா !
வேண்டாம் என் இதயத்திலே
செதுக்கி வைக்கிறேன் !
அப்படிச் சொல்லுடா
என் காதல் கண்ணா !