தமிழக அரசியல் அண்ணன்மார்களுக்கு

தமிழக வாக்காளப் பெருங்குடி மக்களே!
இடைத்தேர்தலில் ஒரு தொகுதியில் குறுக்குவழியில் வெற்றி பெற்றுவிட்டு ஆணவத்தில் தலைகால் புரியாமல் சண்டையிடும் அரசியல் பெருமக்களே!

கடைசியில் மிஞ்சப் போவது ஒருபிடி சாம்பலே!
இதில் ஆணவத்தால் அறிவிழந்து வார்த்தைகளைக் கொட்டித் தீர்க்கிறீர்களே!

இதுவும் நாடகமா?
அல்லது பணத்தின் தாண்டவமா?

மனித உடலில் திரியும் சிங்கங்களே!
சிறுத்தைப் புலிகளே!
ஆக பண வேட்டை மிருகங்களே!

பெரியார் மண்ணில் தப்பிப்பிறந்த பொய்யர்களே!
அண்ணாவின் பெயரை அழிக்க வந்த அறிவிலிகளே!
புரட்சி தலைவரின் கொள்கைகளைக் குழிதோண்டி புதைத்த அயோக்கியர்களே!

இப்படி எங்களுக்கும் அடுக்குமொழி பேச வரும் அரசியல் அண்ணன்மார்களே!

நீங்கள் செய்த எல்லாவற்றையும் நோக்கிக் கொண்டு தான் இருக்கிறோம்.
கண்ணிழந்த குருடர்களென்று நினைத்துக் கொண்டீர்களா?

அடுத்து நடைபெற வேண்டிய வேலைகளைக் கவனிக்காமல் சும்மா தெருநாய்களிலும் கடையர்களாய் குலைத்துக் கொண்டு இருக்கிறீர்கள்!

இது மக்கட்களுக்கு நீங்கள் செய்யும் பச்சைத் துரோகமல்லவா?
ஏன் சரியாகச் சிந்திக்கமாட்டேங்கிறீர்கள்?
ஏன் சரியாகச் செயல்படமாட்டேங்கிறீர்கள் சண்டி மாடுகளைப் போல?

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (26-Dec-17, 7:53 pm)
பார்வை : 567

மேலே