பூங்குழலி - பகுதி 1
காலை கதிரவன் கண்கள் கூச சிட்டு குருவிகளின் கூச்சல் காதில் இசை பாட ஆழ்ந்த உறக்கத்தில் கண்ணின் இமைகள் விழிக்க மறுக்க பூங்குழலி நன்றாக உறங்கி கொண்டிருந்தாள் விடிந்தது தெரியாமல்.
திடிரென்று சமயற்கட்டில் இருந்து குக்கர் விசில் அடிக்க சரசம்மா ('பூ'வின்அம்மா), அடியே பூ எழுந்திரிடி இன்னிக்கு தான் உனக்கு கடைசி பரிட்சை எழுந்து படிச்சு நல்ல வேளைக்கு போயி இந்த குடும்பத்தை காப்பாத்துவனு பார்த்தா இப்படி விடிஞ்சது தெரியாம தூங்குறியே, எந்திரிடி என்று 'பூ'வின் அம்மா நாலு போடு போட வந்தாள்.
ஏன் சரசு சும்மா காலைலயே நொய் நொய்ன்னு கத்திட்டு இருக்க? உனக்கா பரீட்சை எனக்கு தான பரீட்சை நானே கவலை படல நீ என்ன பெருசா பதறுற. நான்லாம் படிச்சு என்னத்த பண்ண போறேன். படிச்சு வெளியூர்ல வேலை பார்த்து உனக்கு மாசம் மாசம் பணம் அனுப்பறதுல தான் கவ்ரவம்னா அந்த படிப்பை நீயே படிச்சு சம்பாரிச்சு பெருமை பட்ருக்க வேண்டிதான சும்மா என்னை ஏன் படிக்க சொல்ற.
இங்க பாரு நம்ம வீட்டை சுற்றி பத்து ஏக்கர் நிலம் இருக்கு. அதில நல்ல விவசாயம் பண்ணி ஆரோக்கியமா வாழலாம் என்று தத்துவம் பேச ஆரம்பித்தவள் கன்னத்தில் பளார் என்று ஒன்னு வைத்தால் சரசு. கன்னத்தை கோதிய வண்ணம் அழுது கொண்டே குளியலறைக்குள் சென்றால் பூ.
பூ அவளுக்கு பெரிய கனவுகள் என்று ஏதும் இல்லை. வீட்டில் இருக்கும் நிலத்தை கொண்டு நன்கு விவசாயம் பண்ணி எப்பொழுதும் இயற்க்கை சூழலில் வாழ்ந்து ஆரோக்கியமாக வாழ்ந்து செல்ல வேண்டும் என்று ஆசை. தந்தை 'பூ'விற்கு பன்னிரண்டு வயது இருக்கும் பொழுது நிலத்தில் வேலை செய்து கொண்டிருக்கையில் பாம்பு ஒன்று கடித்து இறந்து போனார். அவர் இருந்த வரை பச்சை பசேர் என்று இருந்த நிலம் இன்று வறண்ட காடாக மாறி தன்னை யாரும் பார்க்க மாட்டிர்களா என்ற ஏக்கத்துடன் இருப்பதாகவே பூ உணர்ந்தாள். பூவிற்கு இரண்டு தம்பிகள், இரண்டு தங்கைகள்.
'பூ'வின் அம்மா சரசுக்கு அவ்வளவு பெரிய நிலத்தை கொண்டு ஏதும் பண்ண முடியாமல் குத்தகைக்கு விட்டு நூறு நாள் வேளைக்கு செல்ல தொடங்கி விட்டால். தன் கணவனை போல் பிள்ளைகள் நிலத்தில் கஷ்ட்ட பட கூடாது 'பூ'வை எப்படியாவது பெரிய படிப்பு படிக்க வைத்திட வேண்டும் என்ற வைராக்கியத்துடன் இருந்தாள்.
ஆனால் பூ துளி கூட அவள் சொற்பேச்சு கேட்க தயாராக இல்லை. குளியலறையில் இருந்து வந்தவள் சரசு நீட்டின காபி தண்ணியை கூட பார்க்காமல் பள்ளி உடையை உடுத்தி கொண்டு தலை வாரி புத்தக பையை எடுத்து கொண்டு விருட்டென்று சென்று விட்டாள்.
சரசம்மா முகம் வாடி போயி விட்டது பரீட்சை பொழுது இப்படி அடித்து விட்டோமே என்று. பாவம் அவள் முகம் வாடி செல்கிறாளே என்று தாய் மனம் துடித்தது. ஆனாலும் எல்லாம் அவள் முன்னேற்றத்துக்கு தானே பரீட்சை முடிந்து வந்தவுடன் சமாதானம் செய்து கொள்வோம் என்று வைராக்கியமாக இருந்து விட்டாள்.
பள்ளிக்கூடம் செல்லயில் 'பூ'வின் முகம் வாடி இருப்பதை பார்த்த வேணி ('பூ'வின் நெருங்கிய தோழி), என்னடி இன்னிக்கு என்ன புராணம் பாடின உங்க வீட்ல...? கன்னம் இப்படி செவந்திருக்கு என்று நக்கலாக கேட்டாள். என்னடி கிண்டல் அடிக்கிறியா என்று பூ ஒரு முறை முறைத்து கொண்டு நீ என் வீட்டில் இருந்து பாரு அப்போது புரியும் என் வேதனை உனக்கு. ஏய் கோச்சுக்காதடி பூ சும்மா விளையாட்டுக்கு வம்பிழுதேன், சரி சொல்லு என்ன ஆச்சு.
பூ: எங்க அம்மா எப்ப பாரு படி படினு சொல்லிட்டே இருக்காங்க.
வேணி: நல்லதுதானே சொல்றாங்க இதுல என்னடி பிரச்சனை உனக்கு. எங்க வீட்ல எப்ப பாரு பொம்பளைப்பிள்ளையை எதுக்கு படிக்க வைக்கிறீங்க சொல்லி சண்டை போடறாங்க. நீ கொடுத்து வெச்சவ படிக்க சொல்றாங்க சந்தோஷப்படு.
பூ: அது இல்லடி நல்லா படிச்சு வெளியூர்ல போயி வேலை பார்க்கணுமாம். எனக்கு அதுல சுத்தமா இஷ்டமே இல்லடி. அதுனால இந்த கடைசி பரீட்சையை நான் எழுத போவது இல்லனு முடிவு பண்ணிருக்கேன்.
வேணி: ஏய்!! என்னடி பைத்தியம் மாதிரி பேசுற. படிக்காம என்னடி பண்ண போற இந்த கிராமத்துலயே இருக்க போறியா காலம் பூராவும் கஷ்ட போட்டுட்டு. வேணாம்டி உங்க அம்மா உன் மேல பெரிய கனவு வெச்ருக்காங்க அத பொய்யாக்கிறாத.
பூ: சரி, நான் ஒன்னு கேட்கிறேன் நீ பதில் சொல்லு.
வேணி: கேளு...
பூ: நீ படிச்சு என்ன பண்ண போற..?
வேணி: நான் படிச்சிட்டு நல்லா என்னை விட பெரிய படிப்பு படிச்ச பையன பார்த்து கல்யாணம் பண்ணி நகரத்துல செட்டில் ஆகிருவேன்.
பூ: ஒ!! ஏன் இந்த கிராமம் உனக்கு புடிக்கலயா?
வேணி: என்னடி கேள்வி இங்க என்ன வசதி இருக்கு சொல்லு..? இவ்ளோ கேட்க்கிறீயே நீ படிக்காம இந்த கிராமத்துல இருந்து என்ன சாதனை படைக்க போற...? சொல்லு..?
பூ: சாதனை தான் படைக்க போறேன். விவசாயம் பண்ணி வேளாண்மை அழியாம பார்த்திக்க போறேன்.
வேணி: போடி இவளே, இங்கயே தண்ணீர் இல்லாம ஒன்னு இல்லாம இருக்கு. நீ தான் இப்ப பெரிய வேளாண்மை வளர்க்க போற. நீதான் வகுப்புல முதல் மாணவியா இருக்க. கிறுக்கு தனமா யோசிக்காம ஒழுங்கா பரீட்சை எழுதி பாஸ் ஆகுற வழிய பாரு என்று சொல்லி கொண்டிருக்கையில்......
பூ: ஏய் வேணி, இந்த பண்ணையார் வீட்டு நிலம் மட்டும் எப்பயுமே பசுமையா இருக்கு பாருடி. இதே மாதிரி எங்க நிலத்தையும் இந்த ஊரு நிலத்தையும் பசுமையா ஆகணும்டி.
வேணி: அவுங்கலாம் பெரிய பணக்காரங்க. நீ இப்டியே பேசிட்டு இருந்தினா தலைமை ஆசிரியர் சொல்லி என்ன பண்றேன் பாரு என்று வேகமா பள்ளிகூடத்தை நோக்கி விரைந்தாள்.
பூ: ஏய் நில்லுடி என்று பின் விரைந்தாள் !!!!!
பூ பள்ளிகூடத்தை அடைவதுற்குள் வேணி தலைமை ஆசிரியர் அறையில் இருந்து வெளிவருவதை கண்டு கோபமடைந்தாள்.
வேணி: பூ உனக்கு தலைமை ஆசிரியர் அறையில் இருந்து அழைப்பு வந்திருக்கிறது செல் என்றாள்.
கோபமாக உள்ளே சென்ற 'பூ'விற்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது என்று அவளுக்கு அப்போது தெரியாது....!!!
..... தொடரும்