முதிரா கன்னி 8

சிறிது நேரத்தில் கார் ஒன்று வந்து நின்றது. வாடகை காராய் இருக்க வேண்டும். கார் காத்திருந்தது. காருக்குள் வேறு யாரும் இருப்பதாக தெரியவில்லை... வருகிறார்கள்... அந்த பொண்ணும்... அவனும்...
கான்ஸ்டபிள் போனை எடுத்து டயல் செய்ய தொடங்கினார்." ஸார் ... அந்த பொண்ணும்... அவனும் வந்துட்டாங்க ஸார்... ரெண்டு பேரும் கார்ல ஏறப்போறாங்க ஸார்..."
"நீங்க அந்த காரை பாலோவ் பண்ணிக்கிட்டே தகவல் கொடுங்க... நானும் வந்துடறேன்..."
"ஒகே ஸார்..."
கார் நகர தொடங்கியது. சிறிது சிறிதாய் வேகமெடுத்து முன்னேறியது. சென்னை நகரத்தின் போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறி மெதுவாகவே ஊர்ந்து சென்றது.
இப்போது சாலையை விட்டு ஒதுங்கி தெருக்களில் பயணிக்க தொடங்கியிருந்தது. வலது, இடது என வளைந்து, நெளிந்து சந்துகளுக்குள் பயணித்து கொண்டிருந்தது. சற்று நேரத்தில் வண்டி வேகம் குறைந்து நின்று விட்டது.
"ஸார்... வண்டி நின்னுடுச்சு ஸார்... பக்கத்து ஒரு லாட்ஜ் இருக்கு ஸார்... ...............ன்னு போர்டு போட்டு இருக்கு ஸார்... அங்கதான் ஸார் போறாங்க..."
"சரி... நீங்க அங்கேயே வெய்ட் பண்ணுங்க... நான் வந்துட்டே இருக்கறேன்..."
"ஒகே ஸார்..."
நேரம் ஓடத்தொடங்கியது. ஐந்து நிமிடங்கள் கடந்திருக்கும். இன்ஸ்பெக்டர் வந்தார்.
"யோவ்... என்னய்யா... நான் சொன்னத கவனிச்சியா...?"
"பார்த்தேன் ஸார்... முதல் மாடியில மூணாவது ரூம்லதான் லைட் இப்ப போட்டாங்க..."
"ஓகே வாங்க போகலாம்..."
வரவேற்பறையில் ஒரு ட்யூப் லைட் எரிந்து கொண்டிருந்தது. வராண்டாவில் டேபிள் பேன் போட்டு ஒருவன் அமர்ந்திருந்தான்.
"ஒரு பையனும்...பொண்ணும் வந்தாங்களா...?"
"ஸார் ... நீங்க..."
"போலிஸ்... இப்ப சொல்லு... வந்தாங்களா...?"
அவன் கண்களில் மிரட்சி தெரிந்தது.
"ஸார்... அப்படி யாரும் வரலிங்களே..."
"பொய் சொல்லாதே...மூஞ்சி வீங்கிடும்... சொல்றா..."இன்ஸ்பெக்டர் அதட்டலில் அதிர்ந்துபோனான்.
" மேல பதிமூணாம் நம்பர் ரூம் ஸார்..."
"சரி... வேலையாள் யாராவது இருக்காங்களா...?"
"இல்ல ஸார்... நான் மட்டுந்தான்..."
"நல்லதா போச்சு... வா போகலாம்... ரூம காட்டு..."
"யோவ், ஒரு ஆளு... நீ இங்கேயே நில்லுய்யா..."
நீண்ட வராண்டா ... நடந்தார்கள்... ரூம் நம்பர் 11... 12... 13...
"போய் கதவ தட்டு..."
சிறிது காத்திருப்புக்கு பிறகு கதவு திறக்கப்பட்டது. ரிஷப்ஷனிஸ்ட்டை இழுத்து தள்ளிவிட்டு இன்ஸ்பெக்டர் உள்ளே நுழைந்தார். கூடவே கான்ஸ்டபிளும்...

எழுதியவர் : பனவை பாலா (27-Dec-17, 8:02 am)
சேர்த்தது : பனவை பாலா
பார்வை : 145

மேலே