சட்டம் யார் கையில்

தன் குடும்பம் ; தன்னலம் என்று
தன் வாழ்க்கையில் , ஒரு
கட்டமிட்டு வாழும் மனிதா....
சட்டம் வியாபாரம் ஆனதடா உன்னால்!!!

தவறு செய்தவன் இவன் என்று அறிந்தும்,
தண்டிக்க வழியின்றி ,
கண் மூடி நிற்கின்றாளோ....
சட்டத் தேவதை!!!

கண்கள் இருந்தும் ,
காணாதிருந்தது போதுமடா மனிதா...
தடைகளை எதிர்த்து;
தர்மத்தை காக்க
பொதுநலம் கொண்டு,
துணிந்து வா மனிதா...

ஏனெனில்...
சட்டம் உன் கையில்!!!!
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

எழுதியவர் : பானுமதி (28-Dec-17, 10:05 am)
சேர்த்தது : மதி
Tanglish : sattam yaar kaiyil
பார்வை : 126

மேலே