தமிழின் முகவரி

உலக மொழிகளில் சிறந்த மொழியடா! இதற்கோர் துணை ஏனடா ? எழுத்துக்கும் சொல்லுக்கும் இலக்கணம் கூறுமடா ! இலக்கணமில்லா வடமொழியின் துணை ஏனடா ? தேனாய் தித்திக்கும் செம்மொழியாம் தமிழ்மொழி இருக்க , காயாய் கசந்து கிடக்கும் வடமொழித் துணை ஏனடா ? தானாய் தோன்றிய மூத்தமொழி தமிழ்மொழி இருக்க , ஊனாய் கிடக்கும் வடமொழித் துணை ஏனடா ? வானாய் உயர்ந்து பரந்து விரிந்திருக்கும் தமிழ்மொழி இருக்க , மண்ணாய் மட்கிக்கிடக்கும் வடமொழித் துணை ஏனடா ? தமிழ்மொழி எனும் உலகிற்கு உகந்தமொழி இருக்க , அதற்கோர் உந்துமொழி தேவைதானா ? தமிழை வடமொழியோடு கலக்கச்செய்து வேடிக்கை பார்த்தால், தமிழனான நம்முயிர் அவசியம்தானா ? வடமொழிச் சொல்லை நீக்கினால் தமிழ் திறம்பட இயங்காதா? தமிழை அழித்து வந்தோமானால் அடுத்ததலைமுறை தமிழ் படிக்கத்தயங்காதா? திருந்திய செவ்வியல்பு பொருந்திய மொழியே செம்மொழி ! அதுவே நம் தாய்மொழியான தமிழ்மொழி ! அதனால் ,நம் தமிழின் முகவரி நம் தமிழ் எழுத்தே ! ஒருபோதும் கிடையாது வளமற்ற கிரந்தெழுத்து !

எழுதியவர் : கவிமணிமுரசு கா.யோகபாலாஜி (28-Dec-17, 1:00 pm)
சேர்த்தது : யோகபாலாஜி க
பார்வை : 331

மேலே