ஓலைச்சுவடி

காலங் காலமாய் அழியா காவியங்கள்
இன்றைய தேதியிலும் வேண்டிய வரலாறு
முன்னோர் எழுதிவைத்த இலக்கியம் அத்தனையும்
தன்னுள் காத்துவந்த ஓலைச்சுவடி வாழி!

ஓலைச்சுவடி கண்டு அதனைக் காத்திட‌
வழிகள் பலவும்கண்டு எழுத்தில் சேர்த்திட்டார்
நூலாய் அச்சிட்டார் விளக்கம் எழுதிட்டார்
நாளும் வாழ்த்திடுவோம் நூற்கள் வாழ்கவென்றே...

நூலின் பிரதிகளும் மெல்லக் குறைந்திடவே
இணைய வழியும்கண்டு அதனில் பதிவுசெய்தார்
அலைபேசி வழியேயும் கண்டிடவே ஆவணசெய்தார்
கணினிவாழும் உலகினிலே வாழும்தமிழ் போற்றி! போற்றி!

என்னென்ன வடிவங்கள் இனிமேலும் வந்தாலும்
எல்லா வடிவத்திலும் தமிழும் வாழ்ந்திடுமே!
உலகின் மூத்தமொழி அழிவே இல்லாமொழி
உலகம் இருக்கும்மட்டும் என்றும் நிலைத்துநிற்கும்

எழுதியவர் : Velanganni A (28-Dec-17, 6:52 pm)
பார்வை : 204

மேலே