அணியறுபது
இறுகும்வகை பரமசுகம் அதனேயருள் இடைமருதில்
ஏகநாயகா! லோகநாயகா! இமையவர் பெருமாளே! (திருப்புகழ், 107)
அருணகிரிநாதருடைய ஆன்ம அனுபவ நிலையை இங்கே கூர்ந்து ஒர்ந்து உவந்து கொள்கின்ருேம்.
வினைத் தொடர்புகள் அற்று உயிர் பரிசுத்த நிலையை அடைந்தபோது பரமபதியோடு தோய்ந்து பேரானந்தங்களே நுகர்ந்து ம கி ழ் ந் து ஒன்ருய் உறைந்திருக்கும் என்பதை இதல்ை உணர்ந்து உண்மை நிலைகளேத் தெளிந்து கொள்கிருேம்.
பாசம் நீங்கிய அளவே பசு பதியுடன் கலந்து களிக்கின்றது. பசுபதி எனப் பரமேசுரன் பேர் பெற்றுள்ள பெற்றியை உற்றுணரின் உ யி ரி ன் உயர் பேரின்ப நிலையைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். உள்ளம் தூய்மையாய் உணர்வு தெளிந்துவரின் எல்லா இன்பங்களும் எளிதே எய்த வரும்.
சீவன் எனச் சிவன் என்ன வேறில்லை;
சீவனுர் சிவனுரை அறிகிலர்;
சீவனுர் சிவனுரை அறிந்தபின்
சீவனுர் சிவனுயிட் டிருப்பரே.
- (திருமந்திரம் 2017)
இந்த மந்திர மொழியைச் சிந்தனே செய்க.