என்ன தவம் செய்தேனோ

என்ன தவம் செய்தேனோ
உனது நட்பை பெறுவதற்கு
என்ன வரம் பெற்றேனோ
உள்ளம் நீயும் வருவதற்கு

எனக்கான குரலாய் நீ
எனக்கான மனதாய் நீ
எனைத் தொலைத்த பொழுதுகளில்
எனக்கான பிம்பம் நீ

சோக நதியில் தவிக்கையிலே
காப்பாற்றும் படகாய் நீ
முடிவு எடுக்க தயங்கையிலே
புரியவைக்கும் ஆசான் நீ

தடு மாறும் பொழுதுகளில்
விரல் பிடித்தே நடத்திடுவாய்
தடம் மாறும் நேரத்தில்
தயங்காமல் எனைத் தடுத்திடுவாய்

நிலவெனுக்கு உறவு தானே
நீயுமொரு உறவுக் காரன்
வானமெனும் பரந்த வெளியில்
சிறகடித்து பறந்திட வா

தவமின்றி உன்னைக் கண்டேன்
உன் நட்புக்காக நன்றியே
தாகம் தீர்த்தாய் அன்பினாலே
நானில்லை நீ யின்றியே..

எழுதியவர் : Velanganni A (29-Dec-17, 11:35 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 497

மேலே