என்னைக் கொல்லும் காதல்

உனையிலா உலகில் நானும் உயிரிலா ஆய்தம் ஆனேன்

இணையிலா காதல் போரில் இறந்து நான் போவதும் ஏனோ

நினைவிலும் காதல் காதல்
கனவிலும் காதல் காதல்
கடைசியில் சேராக் காதல்
கண்ணீரில் போகும் காதல்

கருவறை மீளாக் குழவி
கல்லறை போகக் கூடுமா
காதலி ஏற்கா காதல்
காதலென உரைத்தல் ஆகுமா

காதலென நீயும் நீயும்
கழிப்பதேன் காலம் காலம்
காதல் வெறும் மாயம் மாயம்
அரிந்துகொள்வாய் நீயும் நீயும்

எண்சிறை இதயம் கொள்ளா என்காதல் என்னைக் கொல்ல என்செய்வேன் என்றன் நெஞ்சே என்காதல் என்னுள் நஞ்சே

--கல்லறை செல்வன்

எழுதியவர் : கல்லறைச்செல்வன் (29-Dec-17, 11:49 pm)
பார்வை : 409

மேலே