கற்ற காதலின் வடு

அடிமையாகித்தான் கிடந்தேன் பலகாலம்.
சிறகொடியும் இந்தத் தருணம்வரை.

சந்திப்பு மறுப்பு மனதினில் ஒரு
வெறுமையை அளித்தே சென்றுள்ளது.

இனி எதிர்பார்ப்புகள் இல்லாத எந்தன்
அலைகளையே இந்தக் கடலில் காணலாம்.

வந்து நின்றாலும், நடிப்பதாயினும்,
அழகு நடை பயின்றாலும், மலையளவு
அன்புக்கு நம்பிக்கையூட்டினாலும்
வழுக்கி விழும் நிலையில்லை இங்கு.

அடைத்திருந்த காதல் கற்றுத் தந்த
முழுமைப் பாடமே முடிவுப்படிக்கட்டாய் இனி.

எழுதியவர் : jujuma999 (2-Aug-11, 4:55 pm)
பார்வை : 279

மேலே