ஆலய அம்பு
கருச் சிதைவு டாக்டர் எல்லாம்
கம்பத்திற்கு கம்பம் அம்புக் குறி போட்டு
முகவரி எழுதுகிறான்
ஆலயம் தொழுவது சாலவும் நன்று
ஆலயம் செல்லும் வழி இது என்று
அம்புக் குறி போர்டு வைபாரில்லை
தெருவெல்லாம் பக்தர்கள்
திக்கு தெரியாமல் தவிக்கிறார்கள்
இறைத் தொண்டர்களே
உங்களில்
ஆற்றுப்படுத்துவார் உளரோ
ஆலய அம்பு போடுவார் உளரோ
சொல்வீர்
----கவின் சாரலன்