இதயமெனும் மயானம் --- முஹம்மத் ஸர்பான்

மூச்சை திருடும் பார்வைகள்
ஈரமான காற்றின் சலங்கை
முத்தம் சிந்தும் கவிதைகள்
தூரமான நாடோடி மடக்கை
எறும்புக்கு பசிக்கும் கனவுகளில்
இரவுகள் தர்ச்சனை கேட்கிறது
பூக்களில் ஒளிந்த முட்களில்
புன்னகை யுத்தம் செய்கிறது
நினைவுகளின் பாலை வனம்
கண்ணீரால் திருடப்படுகிறது
பூந்தோட்டத்தின் குத்தகையில்
கரசக் காடு விலை போகிறது
விறகுகள் போல் இதயத்தை
காலங்கள் சாம்பலாக்குகிறது
கள்ளிச் செடியில் மனதும்
நெடுநாளாய் உண்ணாவிரதம்
கண்ணீர்த்துளிகள் கடலிடம்
வாடகை நிலம் யா சிக்கிறது
தேற்றம் போல் கிழமைகள்
வேகமாய் ஓடிப் போகின்றது
சலங்கை ஓசை இரவினை
ஈசல்களுடன் கடத்துகின்றது
விடியும் முன் இறந்து போன
நினைவுகளின் ஈசல்களை
புதைக்கின்ற மயானமாய்
என் இதயம் இந்த காதலுக்கு
தொண்டுகளும் செய்கின்றது

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (2-Jan-18, 2:12 pm)
பார்வை : 231

மேலே