விரல் கோர்க்க சம்மதம் தருவாயா

கண்ணுக்குள்ளே ஆயிரம் கனவு
கனவுக்குள்ளே ஒரு நிலவு ...நீ !

நீரோடும் நதியாய் என் பயணம்
நதியில் தவழும் மலர், உன்னோடு சிறுதூரம்

மார்கழி குளிரில் தாவும் முயல் குட்டி நீ
உன்னைக் கவர காத்திருக்கும் கவண் நான்

தளம் பதினெட்டும் தலையாட்டும்
நீ குடம் சுமந்து நடந்தாலே

இங்கு பல்லாயிரம் பதுமைகள் இருந்தும்
நீ ஒரு காந்தம்

உன் மேனி வருட பருவ மழையும் காலம் மற்றும்
பாதம் பட மண்ணும் தவமிருக்கும்

கோடிகள் கொட்டினாலும் கிடைக்காத அன்பு
இளஞ்சூரியப் பார்வை
தளிர் காற்று புன்னகை
தினம் கிடைக்க காத்திருக்கும் ஈசல் நான்

கற்காலத்தில் நீ இருந்திருந்தால்
புலவர்களுக்கு கவிதை
சிற்பிகளுக்கு சிற்பம்
பண்பளர்க்கு சொப்பணம்
ஞானிக்கு குறிஞ்சி

உன்னை வர்ணிக்க வார்த்தை கிடைக்கவில்லை
எழுத எழுத்துக்கள் போதவில்லை

என் இதயக் கதவை திறந்த சாவி
இருளில் இருந்தவனும் கொடை தந்து
ஆதவனாய் ஒளி தந்து
என் ஜனனத்த்திற்கு பொருள் தந்து
என் பயணம் முழுமை பெற
இருவரும் விரல் கோர்த்து, புவியைய் சுவடுகளால் நிரப்பிவோம் வா

எழுதியவர் : (2-Jan-18, 12:46 pm)
பார்வை : 1164

மேலே