மனக்கதவு

மனத் கதவு திறந்தது உன்னாலே
நெஞ்சம் ஆடிப் பாடுது தன்னாலே
என் இமைகள் துடிப்பதுன் கண்ணாலே

உன் உருவம் பதிந்ததென் கண்ணோடு
அது ஆழப் பதிந்ததென் நெஞ்சோடு
இசை பாட்டில் கலந்த ஒரு சுதியோடு

புவி ஓடும் நதியே பெண் நதியே
வந்தாய் புவி பூக்க தான்

விண் தூரம் செல்லாமல் புள் இங்கு வாரும்
அன்பே உன் கண்ணைச் சந்தித்தால்

மலர்கின்ற சிறு பூக்கள் வெட்கம் கொள்ள கூடும்
அன்பே உன் கூந்தல் ஏறிட்டால்

கடல் வானம் ஒரு போது நிறம் மாறக்கூடும்
துளிர்க்கின்ற வெண்ணிலவு அது தேயக் கூடும்
நான் கொண்ட நேசம் தேயாது

சுடுகின்ற கதிரவனும் குளிராக மாறும்
உன் முகம் பார்த்து சென்றாலே

குளிர்கின்ற முழு மதியும் சூடாக கூடும்
உனை விட்டு நீங்கி சென்றாலே

உயிராக நான் உன்னை நினைக்கின்றதாலே
என் உயிர் மாய்க்க ஒரு போதும் மனம் இல்லை பெண்ணே
என் உயிர் உன்தன் ஜீவனென்றால்

எழுதியவர் : ஹேம் (2-Jan-18, 12:25 pm)
சேர்த்தது : Abdul Hameed
பார்வை : 72

மேலே