மேகம்

பரந்த நீல வானத்தில்
மிதக்கும் வெள்ளை மேகங்கள்,
தோன்றும் அதன் வடிவிலே
தொலைந்து போகுமே இதயங்கள்..
கடல் நீரை உறிஞ்சியே
காட்டும் பல அதிசயம்,
கருத்த மேகம் மிஞ்சியே
சொல்லும் சில இரகசியம்..
வெப்பம் தகிக்கும் தேசமோ
கூடும் மாலை வேளையில்,
திரண்டு இருண்டு வந்ததோ
மேகம் காட்டும் உற்சவம்..