சில தியாகராஜ கீர்த்தனைகளும் பொருளுரையும் 35 ஸுகி யெவரோ ராமநாம - காநட

இந்த தியாகராஜ கீர்த்தனையை சென்னையில் நடந்த மார்கழி உத்சவத்தில் மல்லாடி சகோதரர்கள் பாடியதை ஜெயா தொலைக்காட்சியில் இன்று (02.01.18) மாலை 5 – 6 மணி நிகழ்ச்சியில் கேட்டேன்.

பொருளுரை:

இராம நாமத்தின் மூலம் சுகம் அனுபவிக்கும் பாக்கியசாலி யாரோ? (அம்மகிழ்ச்சியினால்) பொலிவுற்ற முகச்த்தவர் யாரோ? அனைத்திற்கும் சாரமாகிய தாரக நாமத்தினால் (சுகிக்கும் பாக்கியசாலி யாரோ?)

சத்தியம் தவறாமல், உலகமனைத்திற்கும் தாசனாகி, தெய்வ வேறுபாடின்றி, என்றும் அழிவில்லாத ஸுஸ்வரமான கானத்துடன், நிரந்தரமாகத் தியாகராஜன் துதிக்கும் இராம நாமத்தினால் (சுகிப்பவர் யாரோ)

பாடல்:

பல்லவி:

ஸுகி யெவரோ ராமநாம (ஸு)

அநுபல்லவி:

ஸுகி யெவரோ ஸுமுகி யெவரோ
அகி லஸாரமகு தாரகநாம (ஸு)

சரணம்:

ஸத்யமு தப்பக ஸகலலோகுலகு
ப் ருத்யுடை தை வபே த மு லேக
நித்யமைந ஸுஸ்வரபு கா நமுதோ
நிரந்தரமு த்யாக ராஜநுத நாம (ஸு)

இப்பாடலை KV Narayanaswamy - sukhi evvarO rAma nAma - kAnaDA - tyAgarAja என்று பதிந்து யு ட்யூபில் K.V.நாராயணசாமி பாடுவதைக் கேட்கலாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (2-Jan-18, 10:11 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 44

சிறந்த கட்டுரைகள்

மேலே