என்னவள் சேலையில்
காலையில் தொடங்கி மாலை வரை வேலை படுத்தும் பாடு
சாலையில் தொடங்கி சோலை வரை குயில்கள் பாடும் பாட்டு
நிமிடத்தில் தொடங்கி மணித்துளிகள் வரை நாளைய பொழுதின் நினைப்பு
உள்ளத்தில் தொடங்கி உதடுகள் வரை தினமும் சிரிக்கும் சிரிப்பு
ஒரு வேளை முதல் மூன்று வேளையும் வாட்டி எடுக்கும் பசி
இரவு முதல் விடியல் வரை படுக்கத் தூண்டும் உறக்கம்
அத்தனையும் மறந்தேன் நீ சேலையில் வந்த போது
அமைதியாய் எழும் அலைகளும்
கோவிலில் உள்ள சிலைகளும்
உலக அதிசயம் ஏழும்
இதமாய் வீசும் தென்றலும்
மனமாய் வீசும் பூக்களும்
அழகாய் சிரிக்கும் குழந்தையும்
இறைவன் படைத்த இயற்கையும்
மனிதன் வணங்கும் இறைவனும்
இந்த அத்தனை அழகும் தோற்றுப்போனது
நீ சேலை கட்டி வந்த அழகில்...